Great Indian Amazon sale | அமேசான் ஆஃபர்.. தவறவிடக்கூடாத 5 கிட்சன் பொருட்கள்!!
அமேசான் பண்டிகை சலுகையில் வாங்க வேண்டிய 5 கிட்சன் பொருட்கள் என்னென்ன?
பொதுவாக பண்டிகை காலம் என்றால் ஜவுளி கடை, நகைக்கடை தொடங்கி அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதும். மேலும் பல கடைகள் இந்த பண்டிகை நாட்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல சலுகைகளை அறிவிப்பார்கள். அந்தவகையில் சமீப காலங்களாக தீபாவளி மற்றும் ஆயுத பூஜை ஆகிய பண்டிகளை குறி வைத்து ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இ-வர்த்தக தளங்கள் தங்களுடைய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த சலுகை காலத்தில் அமேசான் தளத்தில் நாம் வாங்க வேண்டிய 5 கிட்சன் பொருட்கள் என்னென்ன?
அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க..
1. பிரிஸ்டிஜ் இன்டக்ஷன் ஸ்டோவ்(பிஐசி 16.0+1900 வாட்):
பிரிஸ்டிஜ் நிறுவனத்தின் 1900 வாட் இன்டக்ஷன் ஸ்டோவ் அமேசான் சலுகை சேலில் 3645 ரூபாயிலிருந்து குறைக்கப்பட்டு 2,185 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த சிறப்பான இன்டக்ஷன் ஸ்டோவ் மின்சாதன ஸ்டோவ் வாங்க நினைக்கும் நபர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. இதில் டபிள் ஹீட்டிங் பிளேட் வசதி உள்ளது.
2. பிலிப்ஸ் ஹண்டு பிளண்டர்:
சூப் கலக்க மற்றும் இதர சமையல் பொருட்களை ஒன்று சேர்த்து சிறப்பாக மிக்ஸ் செய்ய பிலிப்ஸ் நிறுவனத்தின் இந்த ஹண்டு பவர் பிளண்டர் உதவுகிறது. இந்த பிளண்டர் பொதுவாக 1555 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆனால் இது அமேசான் சலுகையில் தற்போது 1349 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ஹண்ட் பிளண்டர் 250 வாட் பவர் பயன்படுத்தி ஓடக்கூடியதாக அமைந்துள்ளது. மேலும் இதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிளேடுகள் வருவதால் இதை சுத்தம் செய்வது மிகவும் சுலபமான ஒன்றாக இருக்கிறது.
3. டைம்ஸ்மூன் 2 இன் ஒன் எஃகு ஃபிரையர் மற்றும் ஸ்டிமர்:
மின்வசதியுடன் முட்டையை ஆம்ப்லட் போட அல்லது மற்ற ரோட்டி உள்ளிட்டவற்றில் முட்டை சேர்த்து சமைக்க ஏதுவாக ஃபிரையிங் வசதி ஆகிய இரண்டும் இதில் அமைந்துள்ளது. பொதுவாக இந்த 2 இன் ஒன் ஐடத்தின் விலை 1499 ரூபாயாக உள்ளது. இது இந்த அமேசான் சேலில் வெறும் 569 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது ஒரு நல்ல சலுகை விலையாக அமைந்துள்ளது.
4. பிரிஸ்டிஜ் பிஆர்டபிள்யூ ரைஸ் குக்கர்:
மின்வசதியில் ஒரு சிறப்பான அரிசி குக்கர் வாங்க திட்டம் வைத்துள்ளவர்களுக்கு இந்த பிரிஸ்டிஜ் எலக்டிரிக் ரைஸ் குக்கர் சிறப்பான ஒரு தேர்வாக உள்ளது. இந்த ரைஸ் குக்கர் இயல்பாக 2695 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்த அமேசான் சேலலில் இதன் விலை 2198 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் சாதம் செய்வது மட்டுமல்லாமல் சூப் வைப்பது, இட்லி அவிப்பது மற்றும் காய்கறிகளை வேக வைப்பது உள்ளிட்ட விஷயங்களை செய்ய முடியும். இது 700 வாட் பவர் உதவியுடன் இயங்கும் திறன் கொண்டது.
5. சாப்பாடு பொருட்களின் எடை அளக்கும் இயந்திரம்:
ஹெல்த் சென்ஸ் உணவு பொருட்களின் எடை அளக்கும் இயந்திரம் ஒரு உணவில் எந்தந்த அளவிற்கு நாம் காய்கறி உள்ளிட்ட சில விஷயங்களை சேர்க்கிறோம் என்று தெரிந்து கொள்ள உதவும் கருவியாக உள்ளது. இந்த இயந்திரம் பேட்டரி வசதியுடன் இயங்குகிறது. இது பொதுவாக 1899 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் அமேசான் சேலில் 50 சதவிகிதம் விலை குறைந்து 898 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் படிக்க: தீபாவளிக்கு விற்பனையா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மலிவு விலை ஜியோ 4 ஜி ஸ்மார்ட்போன்!!