Facebook முடங்கியதற்கு இதுதான் காரணம்? - Dark web-இல் விற்பனைக்கு வந்த Facebook.com!
Facebook Whatsapp Instagram Outage: ஒட்டுமொத்தமாக 1.5 பில்லியன் பயனாளர்களின் தகவல்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
Facebook Whatsapp Instagram Outage: ஃபேஸ்புக் , வாட்ஸப் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான தளங்கள் நேற்று முடங்கின. DNS என அழைக்கப்படும் Domain Name System இன் செயலிழப்பு காரணமாக உலகின் பல இடங்களில் மேற்கண்ட சேவைகளை பயன்படுத்த முடியாமல் பயனாளர்கள் திணறினர். பொதுவாக இதுபோன்ற தொழிநுட்ப கோளாறுகள் சாதாரணமான ஒன்றுதான் என்றாலும், ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சற்று கூடுதல் நேரம் தேவைப்பட்டது, காரணம் அதன் வழக்கமான BGP என அழைக்கப்படக்கூடிய Border Gateway Protocol அப்டேட் தவறாக முடிந்ததுதான் காரணம் என்கின்றனர்.இந்த பிரச்சனை காரணமாகத்தான் இணையத்தில் இருந்தே ஃபேஸ்புக் காணாமல் போய்விட்டது. மேலும் இதனால் பயனாளர்கள் மற்றும் ஃபேஸ்புக் ஊழியர்கள் என இரு தரப்புமே ஃபேஸ்புக் மற்றும் அதன்கீழ் இயங்கும் வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராமின் அணுகலை பெறுவதில் சிரமமாக இருந்திருக்கிறது.
From trusted source: Person on FB recovery effort said the outage was from a routine BGP update gone wrong. But the update blocked remote users from reverting changes, and people with physical access didn't have network/logical access. So blocked at both ends from reversing it.
— briankrebs (@briankrebs) October 4, 2021
கிட்டத்தட்ட 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பிரச்சனை சரி செய்யப்பட்டு, தளங்கள் சீராக இயங்க தொடங்கின. இது குறித்த அறிவிப்பை மார்க் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.இது ஒரு புறம் இருக்க தளங்கள் முடங்கியிருந்த அதே நேரம் ஃபேஸ்புக் விற்பனைக்கு என்ற தகவல்கள் பரபரப்பாக தொடங்கிவிட்டன. ஃபேஸ்புக் என்றால் அந்த தளம் என எடுத்துக்கொள்ள வேண்டாம் . பயனாளர்களின் தகவல்கள்தான். ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட தனியுரிமை கொள்கைகள் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. முன்னதாக இது போன்ற பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் திருடி விற்பனை செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கும் அந்நிறுவனம் ஆளானது.
இந்நிலையில் ஃபேஸ்புக் முடங்கியிருந்த நேரத்தில் ஹேக்கர்ஸ் உலகம் என அழைக்கப்படும் DARK WEB இல் facebook.com விற்பனைக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதில் ஒரு பயனாளர்களின் தகவலுக்கு 5 ஆயிரம் டாலர்,இந்திய ரூபாய் மதிப்பில் 3.72,612 ரூபாய். ஒட்டுமொத்தமாக 1.5 பில்லியன் பயனாளர்களின் தகவல்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
Facebook isn’t just down, the entire domain is up for sale.
— Morning Brew ☕️ (@MorningBrew) October 4, 2021
And @jack is a savage pic.twitter.com/wTEvNwxl7H
JUST IN: Several domain registration companies listed Facebook's main domain up for sale after DNS-related issue took it down pic.twitter.com/J26vvN4BVN
— Insider Paper (@TheInsiderPaper) October 4, 2021
கசிந்த தகவலின் அடிப்படையில் பயனாளர்களின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, இருக்கும் இடம், பயனாளரின் பெயர் மற்றும் ஐடி ஆகியவை இடம்பெற்றிருந்ததாம். வெளியான தகவல்கள் அனைத்தும் முன்பு வெளியான அதே தகவல்கள் அல்ல, இவை அனைத்தும் புதிய பயனாளர்களின் தகவல்கள் என கூறப்படுகிறது. ஹேக்கர்ஸ் இதனை scraping operation மூலம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இன்னும் அந்த சைபர் குற்றவாளிகளால் , பயனாளர்களின் கணக்குகளை தற்போதும் அணுக முடியும்