மேலும் அறிய

Gukesh Dommaraju: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்; வரலாறு படைத்த குகேஷ் - யார் இவர்?

Gukesh Dommaraju : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள குகேஷ் வெற்றி பயணம் பற்றி விரிவாக காணலாம்.

‘’நான் world chess champion ஆவேன்’’ என்ற வார்த்தைகள் வெறும் கனவு இல்லை ” அது வெற்றி கனவு’’ என நிரூபித்துவிட்டார் world champion குகேஷ். அன்று 7 வயது சிறுவன் கூறிய கனவு இன்று நிஜமாகியிருக்கிறது. 

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடரில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் 18 வயது இளம்வீரர் குகேஷ் தொம்மராஜு. உலகின் இளம் செஸ் சாம்பியன் என்ற சாதனையையும் தட்டிச்சென்றுள்ளார் குகேஷ். யார் இந்த இளம் வீரர? 7 வயது சிறுவனின் ஆசை 18 வயது இளைஞனின் சாதனையாக உருமாறிய பயணம் குறித்து தெரிந்துகொள்வோம். 

7 வயதிலேயே செஸ் மீது ப்ரியம்:

கடந்த 2006 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி சென்னையில் பிறந்தார் குகேஷ் தொம்மராஜு..அப்பா ரஜினிகாந்த் டாக்டர் அம்மா பத்மா மைக்ரோபயாலஜிஸ்ட். 7 வயதிலேயே செஸ் மீது ஆர்வம் கொண்ட மகனை கோச்சிங் க்ளாஸ் அனுப்பி ஊக்குவித்துள்ளனர் இந்த ப்ரௌட் பேரண்ட்ஸ். வீக்கெண்டில் செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னை மேலும் மெருகேற்றினார். ஆரம்பம் முதலே வெற்றியை மட்டுமே சுவைக்க பழகினார் குகேஷ்.. உலகின் இளம் வயதில் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற  வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.

2015-இல் நடந்த பள்ளிகளுக்கான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றார் குகேஷ். அந்த வெற்றி அவரது கனவை நோக்கி பயணிக்க பெரும் உத்வேகத்தை அளித்தது. அடுத்ததாக 2018-ல் நடந்த 12 வயதுக்குப்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று குகேஷ், உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டித்தூக்கினார்.

2018-இல் நடந்த ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தனிநபர் மற்றும் குழு என மொத்தம் 5 தங்கப் பதக்கங்களை குவித்தார். 2017-ல் நடந்த 34வது Cappelle-la-Grande Open செஸ் தொடரில், இளம் வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்ற மூன்றாவது நபர் என்ற சாதனையையும் படைத்தார்.

இப்படி வெற்றி மீது வெற்றிகளை குவித்து வந்த குகேஷ்.. 17 வயதில் செஸ் ரேங்கிங்கில் 2750 புள்ளிகளை பெற்றார். சில நாட்களிலேயே 37 ஆண்டுகளாக சாம்பியனாக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை ஓவர்டேக் செய்து அசுர சாதனை படைத்தார்.

செஸ் ஒலிம்பியாட் - தங்க மகன்:

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா முதன்முதலாக தங்கம் வென்று சாதனை படைத்தது.அதிலும் குகேஷின் பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் தங்க மகன் குகேஷ்.

உலக சாம்பியன் பட்டம்:

இப்படி வெற்றி பயணத்தை மேற்கொண்ட குகேஷ்-க்கு இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் டிங் லிரனுக்கு எதிராகப் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இன்று (12.12.2024) நடந்த 14வது போட்டியில் குகேஷ் வெற்றி பெற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.  விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இரண்டாவது நபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

குகேஷ். மேலும், அவர் ஆசைப்பட்டதை போலவே மிகவும் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற நபர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 7 வயது குகேஷின் கனவு 18 வயதில் நனவாக மாறியதை கொண்டாடும் நொடியில் கண்ணீர் வடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் வேர்ல்டு யங்கஸ்ட் செஸ் சாம்பியன் குகேஷ் தொம்மராஜு.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Embed widget