Wrestler Vinesh Phogat : அன்புள்ள பிரதமரே 5 நிமிஷம் ஒதுக்குங்க... விருதுகளை திருப்பி அளிக்கும் வினேஷ் போகத்!
கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
![Wrestler Vinesh Phogat : அன்புள்ள பிரதமரே 5 நிமிஷம் ஒதுக்குங்க... விருதுகளை திருப்பி அளிக்கும் வினேஷ் போகத்! Wrestler Vinesh Phogat to return Khel Ratna and Arjuna Awards amid WFI row, pens open letter to PM Modi Wrestler Vinesh Phogat : அன்புள்ள பிரதமரே 5 நிமிஷம் ஒதுக்குங்க... விருதுகளை திருப்பி அளிக்கும் வினேஷ் போகத்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/1be2af920b8d783dd387d9f25866a2341703599654943572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மோடிக்கு கடிதம்:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக் போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதையடுத்து பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
எனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி அளிக்கிறேன். அதை அறிவிக்கவே நான் எழுதிய கடிதம் இது. இது எனது அறிக்கை" என்று பஜ்ரங் புனியா ட்வீட் செய்திருந்தார்.
சமூக வலைதளத்தில் ட்வீட் செய்த பிறகு, பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை பிரதமரின் இல்லத்திற்கு வெளியே உள்ள நடைபாதையில் வைக்கச் சென்றார். அவரை டெல்லியின் கர்தவ்யா பாதையில் போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
விலகிய சாக்ஷி மாலிக்:
முன்னதாக, கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி பிரிஜ் பூஷண் சிங் ஆதரவாளரான சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர், இதில் சாக்ஷி தனது எதிர்ப்பின் அடையாளமாக விளையாட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். "நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவர் டபிள்யூ.எஃப்.ஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் மல்யுத்தத்தை விட்டுவிடுகிறேன்.”என்று கூறியிருந்தார். அதேபோல், பஜ்ரங் புனியா தன்னுடைய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்தார்.
கனவு கலைந்தது:
இந்நிலையில், கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை திருப்பி அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும், என்ற கனவு கலைந்து வருவதாகவும் வினேஷ் போகத் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வினேஷ் போகத் எழுதியுள்ள கடிதத்தில்,
தேசத்தின் மகள்:
”அன்புள்ள பிரதமர், சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து விலகினார், பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்துள்ளார். நாட்டிற்காக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களின் செயல்களின் பின்னணியில் உள்ள காரணங்கள் முழு நாட்டிற்கும் தெரியும். நாட்டின் தலைவர் என்ற வகையில் இந்த விடயம் உங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நான் வினேஷ் போகத், உங்கள் தேசத்தின் மகள், கடந்த ஒரு வருடத்தில் எனது தற்போதைய நிலையை உங்களுக்குச் சொல்லவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
2016 ஆம் ஆண்டு சாக்ஷி மாலிக் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது எனக்கு நினைவிருக்கிறது, மேலும் உங்கள் அரசாங்கம் அவரை "பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" வின் பிராண்ட் அம்பாசிடராக நியமித்தது. இந்த அறிவிப்பு வெளியானதும், நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு வீராங்கனைகளும் மகிழ்ச்சியடைந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பினர்.
இன்று, சாக்ஷி மல்யுத்தத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்ததால், அந்த 2016 ஆம் ஆண்டை நான் மீண்டும் மீண்டும் நினைவில் வைத்திருக்கிறேன். நாங்கள் பெண் விளையாட்டு வீராங்கனைகள் என்பது அரசாங்கத்தின் விளம்பரங்களில் இடம்பெறுவதற்காக மட்டும்தானா? அந்த விளம்பரங்களில் தோன்றுவதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை,ஏனென்றால் அவற்றில் எழுதப்பட்ட வாசகங்கள் உங்கள் அரசு மகள்களை உயர்த்துவதில் தீவிரம் காட்டுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கனவு கண்டேன், ஆனால் தற்போது அந்த கனவு கலைந்து வருகிறது.வரவிருக்கும் பெண் விளையாட்டு வீரர்களின் கனவுகள் நனவாக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
ஐந்து நிமிடம் ஒதுக்குங்கள்:
கடந்த சில வருடங்களாக பெண் மல்யுத்த வீரர்கள் பலவற்றைச் சந்தித்திருக்கிறார்கள், அதை அனுபவித்த ஒருவரால் மட்டுமே நாம் படும் கஷ்டங்களைப் புரிந்து கொள்ள முடியும். உங்களுடைய அந்த ஆடம்பரமான ஃப்ளெக்ஸ் போர்டுகள் கூட இப்போது காலாவதியாகிவிட்டன, மேலும் சாக்ஷியும் ஓய்வு பெற்றுவிட்டார்.உங்கள் வாழ்நாளில் ஐந்து நிமிடங்களை ஒதுக்கி, அந்த மனிதர் ஊடகங்களில் சொல்வதைக் கேளுங்கள், அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அவர் பெண் மல்யுத்த வீரர்களை பலவீனமானவர் என்று அழைத்தார். இது மிகவும் ஆபத்தானது”என்று கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)