World Athletics Championships 2022: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் ரோகித், ட்ரிபிள் ஜம்பில் எல்தோஷ் இறுதிக்கு தகுதி !
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் எல்தோஷ் பால் மற்றும் ரோகித் யாதவ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டி மற்றும் மும்முறை நீளம் தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்ப்)தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் ரோகித் யாதவ் பங்கேற்றனர். அதில் நீரஜ் சோப்ரா முதல் த்ரோவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தினார்.
இந்நிலையில் அடுத்து மற்றொரு இந்திய வீரர் ரோகித் யாதவ் தன்னுடைய முதல் த்ரோவில் 80.42 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் அவர் அடுத்த இரண்டு வாய்ப்புகளில் இந்த தூரத்தை தாண்டவில்லை. இருப்பினும் தன்னுடைய 80.42 மீட்டர் தூரம் மூலம் இவர் 11வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தினார்.
World athletics championships
— Sports India (@SportsIndia3) July 22, 2022
👉 Rohit Yadav join Neeraj Chopra in Javelin Final
👉 Rohit Yadav threw 80.42m to finish 11th overall in Qualifications
👉 For the first time we will have two athletes in final of same event @afiindia
🇮🇳 pic.twitter.com/dYDpAYunaK
ட்ரிபிள் ஜம்ப்:
ஆடவருக்கான மும்முறை நீளம் தாண்டுதல்(ட்ரிபிள் ஜம்ப்) தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபுபக்கர் மற்றும் எல்தோஷ் பால் ஆகியோர் பங்கேற்றனர். அதில் பிரவீன் சித்ரவேல் 16.49 மீட்டர் நீளம் தாண்டினார். அவருக்கு அடுத்து அப்துல்லா அபுபக்கர் 16.45 மீட்டர் நீளம் தாண்டினார். எல்தோஷ் பால் 16.68 மீட்டர் நீளம் தாண்டி 12வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார். மற்ற வீரர்களான பிரவீன் சித்ரவேல் 17வது இடத்தையும், அப்துல்லா அபுபக்கர் 19வது இடத்தையும் பிடித்தனர். எல்தோஷ் பால் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
World Athletics Championships 2022
— Sports India (@SportsIndia3) July 22, 2022
👉Eldhose PAUL Qualify for Triple Jump Final
👉Paul finished 12th with best effort of 16.68m
👉Parveen ( 16.49) & Abdulla Aboobacker (16.45) finished 17th & 19th in Qualifications
👉Eldhose became the first Indian to qualify for TJ final pic.twitter.com/o8uPIi04i8
முன்னதாக இன்று நடைபெற்ற தகுதிச் சுற்றில் 83.50 மீட்டர் தூரம் வீசினால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்று இருந்தது. இதில் முதலாவது வீரராக ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா 88.39 மீட்டர் தூரம் வீசி அசத்தினார். அத்துடன் ஒரே த்ரோவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.55 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியிருந்தார். அவருடன் தற்போது ரோகித் யாதவ் பங்கேற்க உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்