Watch Video: வங்கதேசம் - ஜிம்பாப்வே த்ரிலிங் போட்டி; நோ-பாலால் மாறிய ஆட்டம்!
Bangladesh Vs Zimbabwe :ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது
டி-20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் நோ-பால் கதை என்ன?
வங்கதேச அணி நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை எதிர்த்து ஜிம்பாப்வே அணி விளையாடிது. ரியான் பர்ல் 27 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக களத்தில் இருந்தபோது, கடைசி 3 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது ஜிம்பாப்வே அணி. 17- வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை. வங்கதேசம் ஸ்பின் பவுலர் மொசாடக் ஹுசைன் இறுதி ஓவரை வீசினார். முதல் நான்கு பந்துகளில் ஜிம்பாப்வே 11 ரன்களை எடுத்தது. (முதல் 5 பந்துகளில் 1, W, 4, 6, W, என 11 ரன்கள் தேறிவிட்டன)
இடது கை வேகப்பந்து வீச்சாளர் இங்கரவா இறங்கினார். 4-வது பந்து சிக்ஸ்ர் பறந்தது. மொசாடக் வீசிய அடுத்த பந்தில், இறங்கி வந்த இங்கரவா அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.
View this post on Instagram
இரண்டு பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் முசரபானி களம் இறங்கினார். இவரும் லேசாக இறங்கி வந்து பேட்டை சுத்தினார். பந்து பேட்டில் சிக்கவில்லை. விக்கெட் கீப்பரிடம் சென்ற பந்தை பிடித்து அவர் ஸ்டம்பிங் செய்ய வங்கதேசம் வெற்றியை கொண்டாடியது.
ஜிம்பாப்வே வீரர்கள் சோகத்துடன் பெவிலியன் திரும்பினர். ஆனால், இங்குதான் ஆட்டத்தில் டிவிஸ்ட்! மூன்றாம் நடுவர்கள் கடைசி பந்திற்கு (Third Umpire Review) ரிவ்யூ என்று அறிவித்தனர்.
விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் அவசரத்தில் ஒரு தவறை செய்திருந்தார். அது என்னவெனில் பந்து ஸ்டம்பைத் தாண்டி வரும் முன்னறே கிளவ்வை முன்னதாக நீட்டி பந்தை ஸ்டம்புக்கு முன்னதாகவே பிடித்து ஸ்டம்பிங் செய்தது. இது ரீப்ளேயில் தெரியவர நோ-பால் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. விதிகளின்படி இப்படி செய்தால் அது நோ-பால் தான். கடைசி பந்து ஃப்ரீ ஹிட் ஜிம்பாப்வேவுக்கு வெற்றி பெற 4 ரன்கள் தேவை. டை செய்ய 3 ரன்கள் தேவை. ஆனால் Mosaddek வீசிய முசரபானி பந்தில் ரன் எடுக்காததால் வங்கதேசம் த்ரில் வெற்றி பெற்றது.
ஷாண்டோவின் அற்புதமான இன்னிங்சில் வங்கதேசம் 150 ரன்கள் தேற்றியது!
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், இது நல்ல பேட்டிங் பிட்ச். ஆனால் எப்போதும் போல் தரமான பவுலிங்குக்கு சாதக பலன் இருக்கும் அப்படிப்பட்ட பிரிஸ்பன் பிட்ச் இது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முசரபானி அருமையாக வீசி முதலில் சவுமியா சர்க்கார் (0), லிட்டன் தாஸ் (14) இருவரையும் வெளியேற்றி 2 ஓவர்களில் 13 ரன்களையே விட்டுக்கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் ஜிம்பாவே அணிக்கு 1 பந்தில் 5 ரன் தேவையாக இருந்தது. உள்ளே வந்த முசர்பானியும் ஸ்டெம்பிங் முறையில் அவுட்டானார். தொடர்ந்து மொசாடெக் ஹொசைன் வீசிய கடைசி பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் களம்கண்ட முசர்பானி கடைசி பந்தை வீண் செய்ய வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.