U-20 உலக தடகள சாம்பியன்ஷிப்: 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இந்திய அணி அசத்தல் !
கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.
20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் முதல் கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் இன்று மகளிர் நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் பங்கேற்றார். அவர் இந்தியாவின் தடகள நட்சத்திரம் அஞ்சு பாபி ஜார்ஜின் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பதால் இவர் மீது அதிக எதிர்பார்பு இருந்தது. இறுதிப் போட்டியில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்டு வந்த ஷைலி சிங் 6.59 மீட்டர் தூரம் தாண்டி அசத்தினார். ஸ்வீடன் வீராங்கனை தன்னுடைய நான்காவது முயற்சியில் 6.60 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார். இதனால் ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அத்துடன் நடப்பு யு-20 உலக ஜூனியர் தடகள போட்டியில் இந்திய அணி தன்னுடைய 3ஆவது பதக்கத்தை பெற்றது. நேற்று நடைபெற்ற ஆடவர் 10000 கிலோ நடை போட்டியில் இந்தியாவின் அமித் பந்தைய தூரத்தை 42.17.94 என்ற நேரத்தில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
Third medal for #India at the #WorldAthleticsU20
— SAIMedia (@Media_SAI) August 22, 2021
Long Jumper #ShailiSingh wins 🥈 for 🇮🇳 with a jump of 6.59m
She trains at SAI Bangalore and is trained by veteran long jumper @anjubobbygeorg1 and husband Robert Bobby George
Way to go champ!#Athletics pic.twitter.com/C4P5fEHUie
முன்னதாக முதலில் நாளில் நடைபெற்ற 4*400 மீட்டர் கலப்பு ரிலே பிரிவில் இந்தியாவின் பிரியா மோகன், சும்மி,பரத் மற்றும் கபில் ஆகியோர் கொண்ட அணி பங்கேற்றது. தகுதிச் சுற்றில் இந்திய அணி 3.23.39 என்ற நேரத்தில் பந்தைய தூரத்தை கடந்து தன்னுடைய ஹீட்ஸில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஓடி 3.20.55 என்ற நேரத்தில் ஓடி மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டில் இந்திய அணி ஓடிய சிறப்பான நேரம் இதுவாகும். இதன்மூலம் இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியிருந்தனர்.
Final Update #WorldAthleticsU20
— IndiaSportsHub (@IndiaSportsHub) August 22, 2021
Before ‘21 ✨
‘02 | 🥈
‘14 | 🥉
‘16 | 🥇
‘18 | 🥇
2021 Championships ✨
🥈| Amit | 10k Walk M
🥈| Shaili | LongJump W
🥉| 4x400 Mixed Team
Great efforts by everyone #WAU20Nairobi21
📸 @vinayakkm | @nitinarya99 pic.twitter.com/EkxCRzWxCL
இதற்கு முன்பாக இந்த வயது பிரிவு தடகள உலக சாம்பியன்ஷிப் தொடரில் நான்கு பதக்கங்களை இந்தியா வென்று இருந்தது. அதாவது 2002ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வட்டு எறிதலில் சீமா அண்டில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். 2014ஆம் ஆண்டு நவ்ஜித் கவுர் தில்லான் வட்டு எறிதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். அதன்பின்னர் 2016 நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு பிறகு 2018ஆம் ஆண்டு மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஹீமா தாஸ் தங்கம் வென்று சாதனை படைத்தார். அதற்கு இம்முறை ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2 வெள்ளி ஒரு வெண்கலம் என மொத்தமாக 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
மேலும் படிக்க: 'ஷாட் மச்சி... ஊர்ல சொல்லிட்டு வந்துட்டியா.. ப்ரீயாவிடு மாமே '- சென்னை தினத்தை கொண்டாடிய சிஎஸ்கே