மேலும் அறிய

’75 நாட்கள் காத்திருப்பு’ திறந்தது கொடைக்கானல்..!

பூங்காக்களில் பூங்கொத்து கொடுத்து சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு..!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மலைவாசஸ்தலங்களான நீலகிரி, கொடைக்கானல், குற்றலாம்உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு தடை விதித்தது, இதனையடுத்து கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருவதால் தமிழகத்தில் இன்று முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன,இதில் குறிப்பாக மாவட்டம் விட்டு மற்ற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறையை தமிழக அரசால்  ரத்து செய்யப்பட்டுள்ளது.


’75 நாட்கள் காத்திருப்பு’ திறந்தது கொடைக்கானல்..!

இந்நிலையில்  கொரோனா தொற்று குறைந்து வரும் இரண்டாம் நிலை மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள்  காலை முதலே ஆர்வத்துடன் வர தொடங்கியுள்ளனர். கேளிக்கை விடுதிகள், பூங்காக்களுக்கு செல்ல தமிழ அரசு தளர்வுகளுடன் அனுமதி அளித்துள்ள நிலையில், கொடைக்கானல் நுழைவாயில் சோதனை சாவடி அருகில்  உள்ள வெள்ளிநீர் வீழ்ச்சி அருவியில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.  பூங்காக்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், கொடைக்கானல் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், 75 நாட்கள் சுற்றுலா செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு இப்போது ஆறுதல் கிடைத்துள்ளது. குறிப்பாக, பிரையண்ட் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு பூங்கா நிர்வாகத்தினர் சார்பில் பூங்கொத்து கொடுத்து  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.’75 நாட்கள் காத்திருப்பு’ திறந்தது கொடைக்கானல்..!

பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் வண்ண வண்ண மலர்களை கண்டு ரசித்தும், செல்பி மற்றும் புகைப்படம்  எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். மேலும் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்தும், கிருமி நாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்தும் சுற்றுலா பயணிகளின் தொலைப்பேசி எண்ணை பதிவு செய்து கொண்ட பிறகே பூங்காவிற்குள் செல்ல பூங்கா நிர்வாகத்தினர் அனுமதிக்கின்றனர். கடந்த 75 நாட்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டதால்  சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே  பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்ற தினங்களில் கொடைக்கானலுக்கு பேருந்துகளில் செல்வோர்கள், தனியார் வாகனங்களில் செல்வோர்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் இன்று எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி கொடைக்கானலுக்குள் வெளியூர்களிலிருந்து வருவோர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கொடைக்கானலுக்கு இ பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் செல்கின்றனர்.

கொடைக்கானலில் உள்ள மூன்று பூங்காக்களையும் கழுகு பார்வையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பார்க்க ரம்யமாக உள்ளது.

கொடைக்கானல் பிளவர் ஷோ பாக்கணுமா? இதோ அதற்கு ஒரு வழி!

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: ஸ்தானிக பட்டர்கள் மறுப்பு; பரபரப்பு!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: ஸ்தானிக பட்டர்கள் மறுப்பு; பரபரப்பு!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா: லட்சதீப ஒளியில் ஜொலித்த கோயில்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா: லட்சதீப ஒளியில் ஜொலித்த கோயில்!
மதுரை ஆட்சியருக்கு சமூக வலைதள மிரட்டல்: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தால் பாதுகாப்பு தீவிரம்!
மதுரை ஆட்சியருக்கு சமூக வலைதள மிரட்டல்: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தால் பாதுகாப்பு தீவிரம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
TN Weather News: சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Embed widget