துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் - ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று இந்தியர் அசத்தல்!
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் நிராஜ் குமார் 346.5 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார்

உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நிராஜ் குமார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்தியாவிற்கு வெண்கலம்
கத்தார் தலைநகர் தோஹாவில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டித்தொடரின் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் நிராஜ் குமார் 346.5 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ரஷ்யாவின் டிமிட்ரி பிமெனோவ் 362.8 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தையும், ஸ்லோவாகியாவின் பாட்ரிக் ஜானி 357.2 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் 2028-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நிராஜ் குமார் தகுதிபெற்றுள்ளார். மேலும், இப்போட்டித்தொடரின் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இஷா சிங், மனு பாகர், திவ்யா ஆகியோர் இணைந்து ஒட்டுமொத்தமாக 1761 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
பதக்கப்பட்டியலில் மொத்தமாக 26 பதக்கங்களை வென்று சீனா முதலிடத்திலும், 10 பதக்கங்களுடன் இந்தியா இரண்டாமிடத்திலும் நீடிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























