Tamil Thalaivas vs Telugu Titans: சரவெடி.. 25 புள்ளிகள் வித்தியாசம்; தெலுகு டைட்டன்ஸை ஊதித்தள்ளி தமிழ் தலைவாஸ் ஹாட்ரிக் வெற்றி
Tamil Thalaivas vs Telugu Titans: தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ப்ரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுகு டைட்டன்ஸ் அணிகள் இன்று அதாவது ஜனவரி 24 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு முன்னர் இந்த சீசனில் இரு அணிகளும் மோதிக்கொண்டதில் தமிழ் தலைவாஸ் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் அணியை புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக புள்ளிக்கணக்கை தமிழ் தலைவாஸ் அணி தெலுகு அணியின் பலமான வீரரான பவான் ஷெர்வத்தை அவுட் ஆக்கி தொடங்கினர். இந்த போட்டியில் பவன் ஷெராவத்தை தமிழ் தலைவாஸ் வீரர்கள் தொடர்ந்து டிஃபெண்ட்ங்கில் அவுட் ஆக்கி வந்தனர்.
முதல் 10 நிமிடங்கள் முடியும் இரு அணிகளுக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் என்பது ஒரு புள்ளியாகத்தான் இருந்தது. தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகளும் தெலுகு அணி 6 புள்ளிகளும் எடுத்திருந்தது. ஆனால் அதன் பின்னர் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்கள் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக சாஹர் சிறப்பாக விளையாடி எதிரணி வீரர்களை மடக்கினார். இதுவரை சாஹர் 58 டேக்கிள் புள்ளிகள் எடுத்து நடப்பு ப்ரோ கபடி லீக்கில் அதிக டேக்கிள் பாய்ண்ட்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அதேநேரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரரான அபிஷேக் சிறப்பாக விளையாடினார். அபிஷேக்கின் டார்கெட் பவான் ஷெராவத்தாக இருந்ததால் அவரை அதிகப்படியாக அவுட் ஆக்கி வந்தார்.
போட்டியின் முதல் பாதி முடியும்போது 20 புள்ளிகளும் தெலுகு 11 புள்ளிகளும் எடுத்திருந்தது. முதல் பாதி ஆட்டம் முடியும்போது தெலுகு டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி ஆல் அவுட் ஆக்கியிருந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இதனால் தெலுகு அணி இரண்டாவது முறையாக ஆல் அவுட் ஆனது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்கள் ஆட்டம் முடியும்போது தமிழ் தலைவாஸ் அணி 34 புள்ளிகளும் தெலுகு டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளும் எடுத்திருந்தது. கடைசி 10 நிமிடங்களில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து வந்தாலும் தமிழ் தலைவாஸ் அணியின் கரங்களே ஓங்கி இருந்தது. கடைசி 10 நிமிடங்களில் தமிழ் அணி தெலுகு அணியை மூன்றாவது முறையாக ஆல் அவுட் செய்தது. இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 54 புள்ளிகளும் தெலுகு டைட்டன்ஸ் அணி 29 புள்ளிகளும் எடுத்திருந்தது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி 25 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தமிழ் தலைவாஸ் அணியின் ஒட்டுமொத்த ப்ரோ கபடி லீக்கின் முதல் ஹாட்ரிக் வெற்றியாகவும் பதிவானது. இந்த வெற்றி மூலம் தமிழ் தலைவாஸ் அணியின் புள்ளிகள் வித்தியாசம் 28ஆக மாறியுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனின் முதல் 11 போட்டிகளில் பெரும்பான்மையான போட்டிகளில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் சொதப்பி வந்தது. இதனால் தொடர் தோல்விகளையும் சந்தித்தது. ஆனால் இரண்டாவது 11 போட்டிகளின் தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடி வருகின்றது. தமிழ் தலைவாஸ் அணி