மேலும் அறிய
ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது - எம்பி மாணிக்கம் தாகூர்
திருமாவளவன் டில்லி தேர்தல் முடிவை பார்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசிக்க வேண்டும் என கூறியதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

மாணிக்கம் தாகூர் எம்.பி
Source : whats app
ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது என விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் திருநகரில் பேட்டியளித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
Delhi Election Result: டெல்லி சட்டமன்ற தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை மதிக்கிறோம். பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துகள். மக்களின் நலனை கருத்தில், அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கான பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்லது. சுகாதாரம், கல்வி, நிர்வாகம் ஆகிய துறைகளில் 10 ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்களை செய்திருக்கிறோம். சிறந்த எதிர்கட்சியாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், மக்களின் நலனுக்காக அவர்களுடன் களத்தில் இருப்போம்.” என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது என விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டியளித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் எம்.பி
மதுரை திருநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் டெல்லி தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிய போது
ஆணவத்தால், அகங்காரத்தால் ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி. இரண்டு முறை ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியை பாதுகாத்திருக்க வேண்டும், பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததாலேயே தோல்வியை தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் இணைந்திருந்ததால் நிச்சயம் வெற்றி கிடைத்திருக்கும் ஆனால் அகங்காரத்தின் காரணமாக தற்போது தோல்வியை தழுவுகிறார்கள்.
பா.ஜ.க., வெற்றி ஆபத்து
தற்போது பாஜக டெல்லியில் வெற்றி பெறுவது டெல்லிக்கு ஆபத்தாக முடியும். அதற்கு காரணம் ஆம் ஆத்மி கட்சி தான். இந்தியா கூட்டணி தலைவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் வெற்றி பெறாததற்கு காரணம் ஆம் ஆத்மி தான், நாங்கள் அவர்களோடு கூட்டணியில் இருந்தோம். கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகியதே காரணம்” என்று கூறிய மாணிக் தாகூர்..., திருமாவளவன் டில்லி தேர்தல் முடிவை பார்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசிக்க வேண்டும் என கூறியதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - இந்தியா கூட்டணியில் ஈகோ பிரச்சனை... திருமாவளவன் என்ன சொல்ல வருகிறார்..?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Thiruparankundram: திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; உள்ளூர் மக்கள் தள்ளி நிற்பது ஏன்?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion