T20 WC 2022 IREvsAFG : ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி ரத்து.! புள்ளிப்பட்டியலின் நிலவரம் என்ன..?
T20 CRICKET 2022: இன்று மெல்பர்னில் மழை காரணமாக ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது.
ET20 CRICKET 2022: இன்று மெல்பர்னில் மழை காரணமாக ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மழையால் சில போட்டிகள் ரத்தாவது சுவாரஸ்யத்தை குறைக்கிறது. தென்னப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா ஜெயித்திருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அதன்பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணி ஆடவேண்டிய 2 போட்டிகள் ரத்தாகியுள்ளன. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே ஆடியது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டி மழையால் ரத்தானது.
இந்நிலையில் இன்று ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து மோதவிருந்த சூப்பர் 12 சுற்று போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கிவிருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை முடிந்த பிறகு டாஸ் போட்டு ஆட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் டாஸ் கூட போட முடியாமல் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. சூப்பர் 12 புள்ளி பட்டியலில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் உள்ளது.
Group 1 clash between Afghanistan and Ireland has been abandoned due to persistent rain in Melbourne 🌧#T20WorldCup | #AFGvIRE pic.twitter.com/jhZAbWxuUW
— ICC (@ICC) October 28, 2022
முந்தைய போட்டியில் இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்திய நிலையில், இந்த போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்பில் இருந்தது அயர்லாந்து அணி. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் போராடி தோற்றது ஆப்கானிஸ்தான் அணி. நியூசிலாந்துக்கு எதிரான இந்த அணியின் இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இப்போது 3வது போட்டியும் மழையால் கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளும் இதற்கு முன்பு ஆடிய போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அயர்லாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடி தலா 2 புள்ளிகளுடன் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.