மேலும் அறிய

Squash World Cup: ஸ்குவாஷ் உலகக்கோப்பையை வென்ற எகிப்து; பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Squash World Cup: சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் எகிப்து அணி மலேசியா அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. 

சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் எகிப்து அணி மலேசியா அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கடந்த 13 ஆம் தேதி முதல்  4வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலகின் 8 நாடுகளைச் சேர்ந்த  வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒருமுறை மோதும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்ளும். இந்நிலையில், இறுதிப் போட்டியில் மோதிக் கொண்ட மலேசியா மற்றும் எகிப்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற பலப் பரீட்சையில் பலமான எகிப்து அணி மலேசியா அணியை 2 - 1 என்ற் செட் கணக்கில் வீழ்த்தி உலககோப்பையை கைப்பற்றியுள்ளது.  

இறுதிப் போட்டியில், எகிப்து அணியின் ஏமன் மலேசிய அணியின் ஒய்யிடம் 0 - 3 என்ற கணக்கில் தோற்றார். அதன் பின்னர் எகிப்து அணியின் எலைனென் மலேசிய அணியின் பிரகாசத்தை 3 - 0 என்ற கணக்கில் வென்று அசத்தினார். அதன் பின்னர் நடைபெற்ற மூன்றாவது சுற்றில், எகிப்து அணியின் அபோல்கெய்ர் மலேசியாவின் அஸ்மானை  3-1 என்ற கணக்கில் வீழ்த்தி எகிப்து அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தந்தனர். 

உலககோப்பை ஸ்குவாஷ் போட்டியை வென்ற எகிப்து அணிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டித் தொடரை வென்ற எகிப்து அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோப்பையை வழங்கினார். இந்த  சர்வதேச ஸ்குவாஷ் போட்டி-2023 நிறைவு விழாவில் கலந்து கொண்டு, சர்வதேச ஸ்குவாஷ் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களையும், பரிசுத் தொகைகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், “உலகின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்கள் கலந்துகொண்டுள்ள இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியில் 4 வீரர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அகாடமியில் தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கத்தால் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் பெருமைக்குரிய ஒன்று.

நமது மாநிலம் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்களில் 80 நபர்களைக் கொண்டு பலம் பெற்றுள்ளது. நமது மாநிலத்தில் ஸ்குவாஷ் துறையில் 5 அர்ஜுனா விருது பெற்றவர்களும், பத்மஸ்ரீ விருது பெற்ற ஒருவரும் உள்ளனர். நம் மாநிலத்தின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்களான ஜோஷ்னா சின்னப்பா. தீபிகா பல்லிக்கல், சவுரவ் கோஷல் மற்றும் அபய் சிங் ஆகியோர் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பவர்களாக உள்ளனர்.

ஒருபுறம் துவக்க நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களையும். மறுபுறத்தில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களையும் ஊக்குவிக் நமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக முடித்த பிறகு. பன்னாட்டு விளையாட்டுகள் மற்றும் போட்டிகளுக்கான விருப்பமான இடமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

  • ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பையும், மகாபலிபுரத்தில் உலக சர்ஃபிங் லீக்கையும் நம் மாநிலம் நடத்தவுள்ளது.
  • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023, நமது மாநிலத்தில் நடைபெற உள்ளது என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்தப் போட்டிகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சிறந்த விளையாட்டு வீரர்கள் / வீராங்னைகள் பங்கேற்க உள்ளனர்.
  • விளையாட்டு உள்கட்டமைப்பில் அரசு அதிநவீன வசதிகளை உருவாக்கி வருகிறது.

ஒரு விளையாட்டு வீரர். தனது திறமையைக் காட்டி வெற்றி பெற எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் Tamil Nadu Champions Foundation' என்கிற அறக்கட்டளையை சமீபத்தில் தொடங்கினோம்.

ஸ்குவாஷ் உலகக்கோப்பை - 2023 போட்டியை சென்னையில் நடத்துவதற்கு இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சங்கம் எடுத்த முயற்சிகளை மீண்டும் பாராட்டுகிறேன். குறிப்பாக, சர்வதேச ஸ்குவாஷ் சம்மேளத்தின் தலைவர் ஜீனா உட்ரிட்ஜுக்கு (Zena Woodridge) நான் தனிப்பட்ட முறையில் நன்றி கூறுகிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் திரு. என்.ராமச்சந்திரன் அவர்கள் நமது மாநிலத்தில் விளையாட்டை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றுகிறார்.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து வந்திருக்கும் அனைத்து வீரர்களுக்கும் எனது நன்றியையும், வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போட்டிகளில் வெற்றி வாகை சூடிய வீரர், வீராங்கனைகளுக்கும், விளையாட்டு மேலாளர்கள் மற்றும் அரசு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதிகாரிகளுக்கும் எனது விளையாட்டு வீரர்களே. வீராங்கனைகளே! வெற்றி ஒன்றே இலக்காகக் கொண்டு விளையாடுங்கள்!

நீங்கள் அடையும் வெற்றி என்பது நீங்கள் பிறந்த நாடு அடையும் வெற்றி!

நீங்கள் சார்ந்த நாடு அடையும் வெற்றி! எனவே, உங்களது கடமையும் பெரிது, பொறுப்பும் பெரிது. உங்களது திறமையும் பெரிது.” என தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Embed widget