Kabaddi player shot dead: கபடி போட்டியின் நடுவே சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல வீரர்... பஞ்சாபில் பரபரப்பு
8 முதல் 10 தோட்டாக்கள் சந்தீப்பின் உடல்களை தாக்கி இருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்திரில் நடைபெற்று வந்த கபடி போட்டியின்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சர்வதேச கபடி வீரரான சந்தீப் நங்கலை சுட்டு கொன்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போட்டி நடந்து கொண்டிருந்தபோது மைதானத்திற்கு வந்த மர்ம நபர்கள், சினிமாவில் வருவது போல துப்பாக்கியில் சுட்டுள்ளனர். 8 முதல் 10 தோட்டாக்கள் சந்தீப்பின் உடல்களை தாக்கி இருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Punjab| Kabbadi player Sandeep Nangalwas shot dead by unidentified people in Mallian
— ANI (@ANI) March 14, 2022
Four people arrived in a car & shot him during an ongoing match. FIR has been registered, we're investigating. Further details can be given after post mortem:Satinder Singh, SSP Jalandhar Police pic.twitter.com/czvnnu9L9G
கடந்த 10 ஆண்டுகளாக கபடி விளையாட்டில் பிரபலாமன வீரராக வலம் வரும் சந்தீப், உள்ளூர் வெளிநாடு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தவர். இந்நிலையில், திடீரென நடைபெற்றிருக்கும் அசம்பாவிதத்தால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, அந்த மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியை அமைக்கிறது. இந்நிலையில், பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடைபெற்றுள்ள துப்பாக்கிச்சூடு சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிற விளையாட்டுச் செய்திகள்
Watch Video: சிஎஸ்கே பயிற்சி களத்தில் ஒரு காண்ட்ராக்டர் நேசமணி - வைரலாகும் புதிய வீடியோhttps://t.co/NEW5fA4YNx#ChennaiSuperKings #IPL2022
— ABP Nadu (@abpnadu) March 14, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

