மேலும் அறிய

Tamil Thalaivas: வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்; துயர் துடைக்க அள்ளிக்கொடுத்த தமிழ் தலைவாஸின் முத்து

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியில் விளையாடும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசானமுத்துவின் வீடு கனமழையில் இடிந்தது.

தென் மாவட்ட வெள்ளம்:

அண்மையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்தது. இதில், புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியில் விளையாடும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசானமுத்துவின் வீடு கனமழையில் இடிந்தது.

உதவி செய்வேன்:

இந்தநிலையில், 'தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க உதவுவேன்' என தமிழ் தலைவாஸ் அணி வீரர் மாசானமுத்து லட்சுணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "எனது பெற்றோர் தற்போது கிராமத்தில் உள்ள பள்ளியில் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அரசு தற்காலிக வீடுகளை உருவாக்கியுள்ளது. புதிய வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் நாங்கள் ஒரு குடிசையைக் கட்டப் போகிறோம். 

நன்கொடையாக வழங்க உள்ளேன்:

தூத்துக்குடியைச் சேர்ந்த வி விஸ்வந்த் மற்றும் நானும் எங்கள் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க நிதி வழங்க உள்ளோம்" என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய மாசானமுத்து, “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எனது கிராமத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது கபடி விளையாட ஆரம்பித்தேன். பதினொன்றாம் வகுப்பில் வேறு பள்ளிக்குச் சென்று அந்த பள்ளியில் இருந்த பயிற்சியாளர்களைக் கொண்டு எனது விளையாட்டை மேலும் மேம்படுத்தினேன். பள்ளிப்படிப்புக்குப் பிறகு எனது ஆட்டம் கொஞ்சம் மேம்பட்டது. அதிலும் நான் சென்னையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர்ந்தபோது எனது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்திக் கொண்டேன். 

என்னுடைய பெற்றோர்கள் என்னை கபடி வீரராக பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் இது காயம் ஏற்படக்கூடிய விளையாட்டு என்பதால் அரை மனதுடன் என்னை சென்னைக்கு அனுப்பினர். 18 வயதில் எனது கிராமத்திலிருந்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் விடுதிக்கு மாறினேன். தற்போது  நான் விடுதியில் இருந்து வெளியேறி, சமீபத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளேன். நான் கபடி விளையாடாதபோது சென்னையில் வருமான வரித்துறையில் வரி உதவியாளராகப் பணிபுரிகிறேன்." என்று அவர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க: Watch video: மெக்ராத்தின் குடும்ப பெண் உறுப்பினர்களுடன் கைகுலுக்க மறுத்த பாகிஸ்தான் வீரர்! வைரல் வீடியோ!

மேலும் படிக்க: T20I series: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்... ஹிட்மேன் ரோகித் சர்மா ரன் மிஷின் விராட் கோலிக்கு இடம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
சபரிமலையில் பக்தர்களின்  பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை
சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை
Viruchigam  New Year Rasi Palan: தொட்டதெல்லாம் வெற்றி! 2025ல் கம்பேக் தரப்போகும் விருச்சிகம்!
Viruchigam New Year Rasi Palan: தொட்டதெல்லாம் வெற்றி! 2025ல் கம்பேக் தரப்போகும் விருச்சிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?MK Stalin slams Intelligence IG: ''கோட்டை விட்ட உளவுத்துறை! கடுப்பான முதல்வர் ஸ்டாலின்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
சபரிமலையில் பக்தர்களின்  பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை
சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை
Viruchigam  New Year Rasi Palan: தொட்டதெல்லாம் வெற்றி! 2025ல் கம்பேக் தரப்போகும் விருச்சிகம்!
Viruchigam New Year Rasi Palan: தொட்டதெல்லாம் வெற்றி! 2025ல் கம்பேக் தரப்போகும் விருச்சிகம்!
மின்சார வாரியத்தில் ஊழல்களும், முறைகேடும்; செந்தில்பாலாஜிக்கு தலைவலியை தரும் அன்புமணி
மின்சார வாரியத்தில் ஊழல்களும், முறைகேடும்; செந்தில்பாலாஜிக்கு தலைவலியை தரும் அன்புமணி
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
Breaking News LIVE: பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை; கவலைக்கிடத்தில் தாய் - எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு
Breaking News LIVE: பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை; கவலைக்கிடத்தில் தாய் - எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு
"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Embed widget