Watch video: மெக்ராத்தின் குடும்ப பெண் உறுப்பினர்களுடன் கைகுலுக்க மறுத்த பாகிஸ்தான் வீரர்! வைரல் வீடியோ!
பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான், முன்னாள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத்தின் குடும்ப பெண் உறுப்பினர்களுடன் கைகுலுக்காமல் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடந்த முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது . இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 77.1 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 109.4 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
தொடர்ந்து 14 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் விளையாடியது . அதன்படி, 3வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. நேற்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில், 43.1 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி ஆட்டமிழந்தது . இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு:
முன்னதாக, இந்த தொடரின் போது மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மெக்ராத் அறக்கட்டளை சார்பில் ஐகானிக் பிங்க் டெஸ்ட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இரு நாட்டு வீரர்களும் பிங் நிற தோப்பி அணிந்து விளையாடினார்கள். அப்போது போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மெக்ராத் அறக்கட்டளை சார்பில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் மெக்ராத்தின் குடும்ப உறுப்பினர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களை வரவேற்றேனர்.
கைகுலுக்க மறுத்த ரிஸ்வான்:
All Pakistan players shook hands with female members in Glenn McGrath's family but Mohammad Rizwan didn't 💯 #AUSvPAK pic.twitter.com/uxxCzcja8v
— Farid Khan (@_FaridKhan) January 6, 2024
இதில் , மெக்ராத் குடும்ப உறுப்பினர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களை கைகுலுக்கி வரவேற்றனர். ஆனால் பாகிஸ்தான் அணி வீரரும், அந்த அணியின் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் அங்கு இருந்த மெக்ராத் குடும்ப பெண் உறுப்புனர்களுடன் கைகுலுக்க மறுத்து வணக்கம் சொல்லி சென்றார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Top All Rounders: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் TOP 10 ஆல்ரவுண்டர்கள்! யார் யாருன்னு தெரிஞ்சுக்கோங்க!
மேலும் படிக்க: David Bedingham: "கோலியும், ரோகித் சர்மாவும் தான் காரணம்" தெ.ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு உதவிய டேவிட் பெடிங்காம்!