மேலும் அறிய
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்
Source : Other
பாரிஸ் ஒலிம்பிக்:
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோரும் தடகள அணியில் இடம்பிடித்துள்ளனர். நீளம் தாண்டுதலில் ஜஸ்வின் அல்ட்ரின் இந்திய தடகள அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பாரிஸில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















