World Billiards Championship: 26வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் பங்கஜ் அத்வானி!
உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி ‘சாம்பியன்’ பட்டம் வென்றார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பங்கஜ் அத்வானி உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2023:
இந்தியாவின் நட்சத்திர வீரர் பங்கஜ் அத்வானி புதிய வரலாறு படைத்துள்ளார். இன்று (நவம்பர் 21) நடைபெற்ற IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சக இந்திய வீரரான சவுரவ் கோத்தாரியை தோற்கடித்தார். இதன் மூலம் பங்கஜ் அத்வானி 26-வது முறையாக ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
IBSF World Billiards Champion (Long Format) 🏆😊
— Pankaj Advani (@PankajAdvani247) November 21, 2023
This is for us India 🇮🇳🙏🏻 pic.twitter.com/kLEdRPpnnq
பங்கஜ் அத்வானி தனது முதல் சாம்பியன் பட்டத்தை கடந்த 2005 ஆம் ஆண்டில் பெற்றார். இச்சூழலில் தான், World English Billiards (Long-Up) வடிவ போட்டியில் ஒன்பதாவது முறையாக பட்டத்தை வென்றுள்ளார். அதேநேரம் பாய்ன்ட்ஸ் வடிவ போட்டிகளில் எட்டு முறை சாம்பியன் பட்டத்தை தன் வசப்படுத்தியுள்ளார். இது தவிர, ஒருமுறை சர்வதேச பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்தாரர்.
சாம்பியன்:
இச்சூழலில் தான் பங்கஜ் அத்வானி கத்தாரில் நடைபெற்ற அரையிறுதியில் இந்திய வீரரான ரூபேஷ் ஷாவை 900-273 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். அதேபோல், துருவ் சித்வாலாவை 900-756 என்ற கணக்கில் தோற்கடித்தார். இவ்வாறாக அரையிறுதி போட்டியில் சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இவர் சக இந்திய வீரரான சவுரவ் கோத்தாரியை வீழ்த்தி IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
Incredible feat by Pankaj Advani! Securing his 26th World title in the World English Billiards (Long-Up) Championship 2023 at Doha, Qatar, is an outstanding accomplishment. He's truly owned the game!
— Jay Shah (@JayShah) November 21, 2023
Big congratulations, @PankajAdvani247! Your victory brings immense pride to the… pic.twitter.com/a6RXGBYbpJ
தற்போது IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இவரை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 21) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”பங்கஜ் அத்வானியின் அபாரமான சாதனை இது.
கத்தாரின் தோஹாவில் 2023 உலக இங்கிலீஷ் பில்லியர்ட்ஸ் (லாங்-அப்) சாம்பியன்ஷிப் 2023 இல் அவரது 26-வது உலக சாம்பியன் பட்டத்தை வெல்வது ஒரு சிறந்த சாதனையாகும். இவர் உண்மையாகவே விளையாட்டிற்கு சொந்தமானவர். உங்களால் தேசம் பெருமை அடைகிறது. வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். மேலும், நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க: Watch Video: உலகக் கோப்பைத் தோல்வியால் ஷகிப் அல் ஹசன் மீது தாக்குதலா? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
மேலும் படிக்க: Mohammed Shami: இறுதிப் போட்டியை பார்க்க நேரில் வராத முகமது ஷமியின் தாய் - எதனால் தெரியுமா?