Tokyo Olympics 2020: 400 மீட்டர் கலப்பு ‛ரிலே’ ஏமாற்றிய இந்திய அணி: 13வது இடம் பிடித்து பின்தங்கியது!
கலப்பு தொடர் ஓட்டத்தின் முதல் சுற்று போட்டியில், முகமது அனாஸ், ஆரோக்கிய ராஜீவ், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் முதல் சுற்றில் பங்கேற்றனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் தடகள போட்டிகள் இன்று தொடங்கின. தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீரர்கள், ஒலிம்பிக் 4*400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளனர். கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ரேவதி வீரமணி, தனலெட்சுமி, சுபா வெங்கடேசன் ஆகியோரும், ஆண்கள் தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் தேர்ச்சி பெற்றனர்.
இன்று, கலப்பு தொடர் ஓட்டத்தின் முதல் சுற்றுப்போட்டி பெற்றது. 15 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில், முதல் 8 இடங்களை பிடிக்கும் நாடுகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஜமைக்கா, போலாந்து, உக்ரைன், இங்கிலாந்து, இத்தாலி, பிரேசில், நெதர்லாந்து அணிகளோடு இந்திய அணி போட்டியிட்டது.
இந்த போட்டியில், முகமது அனாஸ், ஆரோக்கிய ராஜீவ், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகியோர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் இந்த போட்டியின் முதல் சுற்றில் பங்கேற்றனர். இதில், 3.19.93 நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து 13-வது இடத்தில் நிறைவு செய்தனர். இதனால், இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தனர். ஆனால், இன்று இந்திய அணி பதிவு செய்துள்ள நேரம், சீசன் பெஸ்டாக பதிவு செய்துள்ளனர்.
Athletics:
— India_AllSports (@India_AllSports) July 30, 2021
Indian team (Yahiya, Revathi, Subha, Arokia) finish last in their Heat clocking 3:19.93 in Mixed 4X400 Team relay event.
OUT of contention for Final spot.
Infact India's PB: 3:15.71 also won't have taken them to Final. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports
முன்னதாக, இன்று நடைபெற்ற 3000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார். அதில் இரண்டாவது ஹீட்ஸ் பிரிவில் இவர் ஓடினார். தொடக்கத்தில் சற்று சிறப்பாக ஓடிய அவினாஷ் சேபிள் இறுதி வரை அதை தக்க வைக்க முயற்சி செய்தார். இறுதியில் பந்தைய தூரத்தை 8.18.12 என்ற நேரத்தில் முடித்தார். அத்துடன் புதிய தேசிய சாதனையை படைத்தார். அவர் தன்னுடைய முந்தைய தேசிய சாதனையான 8.20.20 என்ற நேரத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.
ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் எம்.பி.ஜபீர் பங்கேற்றார். இவர் 5ஆவது ஹீட்ஸில் ஓடினார். இந்தச் சுற்றில் அவர் பந்தைய தூரத்தை 50.77 நேரத்தில் கடந்து 7ஆவது இடத்தை பிடித்தார். ஒவ்வொரு ஹீட்ஸ் பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அவர்களுடன் மொத்தமாக ஹீட்ஸ் பிரிவில் சிறப்பான நேரத்தை வைத்திருக்கும் அடுத்த 4 பேரும் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். அந்தவகையில் தன்னுடைய ஹீட்ஸ் சுற்றில் கடைசி இடத்தை பிடித்ததன் மூலம் முதல் சுற்றுடன் எம்.பி.ஜபீர் வெளியேறியுள்ளார். அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் டூட்டி சந்த் பங்கேற்றார். அவர் 100 மீட்டர் முதல் சுற்றில் 5ஆவது ஹீட்ஸ் பிரிவில் ஓடினார். ஒவ்வொரு ஹீட்ஸ் பிரிவில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். இந்நிலையில் டூட்டி சந்த் பந்தைய தூரத்தை 11.54 நேரத்தில் கடந்து தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் 7ஆவது இடத்தை பிடித்தார். இது அவரின் சொந்த சிறப்பான நேரமான 11.17 விநாடிகள் என்பதை விட மிகவும் அதிகமான ஒன்றாகும். இதனால் மகளிர் 100 மீட்டர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை டூட்டி சந்த் இழந்தார். அத்துடன் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.