மேலும் அறிய

Olympics 2024: இன்னும் சற்று நேரத்தில் அரையிறுதி! ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்கு பெரும் சிக்கல்!

இந்திய ஹாக்கி அணியின் நடுகள வீரர் ரோகித் தாஸ் ஒலிம்பிக் அரையிறுதியில் விளையாடததால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புகள் உள்ள போட்டிகளில் ஹாக்கியும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் தொடக்கம் முதலே இந்திய ஹாக்கி அணி சிறப்பாக ஆடி வருகிறது.

ரோகித் தாஸ்க்கு தடை:

இந்த நிலையில், இந்திய ஹாக்கி அணி காலிறுதியில் அபாரமாக ஆடி பிரிட்டன் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய வீரர் ரோகித்தாஸுக்கு ரெட் கார்ட்டு ஆட்டத்தின் நடுவரால் காட்டப்பட்டதால் அவரால் தொடர்ந்து ஆட முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும் 10 வீரர்களுடன் ஆடிய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி இன்று இரவு 10.15 மணிக்கு  அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதுகிறது. காலிறுதியில் பிரிட்டன் அணிக்கு எதிராக ரெட் கார்டு காட்டப்பட்ட ரோகித்தாஸ் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர் ஜெர்மனி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கமாட்டார்.

இந்திய அணிக்கு பின்னடைவு:

மொத்தம் 16 பேர் கொண்ட இந்திய அணி 15 பேர் கொண்ட அணியாகவே அரையிறுதியில் களமிறங்குகிறது. ரோகித்தாசுக்கு விதிக்கப்பட்ட ஒரு போட்டிக்கான தடைக்கு எதிராக இந்திய ஹாக்கி நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இருப்பினும், அவர் ஜெர்மனிக்கு எதிரான ஆடுவது வாய்ப்புகள் குறைவு என்றே கூறலாம்.

ரோகித்தாஸ் காலிறுதி போட்டியின்போது பந்தை வேகமாக கடத்திச் சென்றபோது அவரது ஹாக்கி மட்டை தெரியாமல் இங்கிலாந்து வீரர் வில் கால்னன் முகத்தில் பட்டது. இதையடுத்து, இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து அவருக்கு தொடர்ந்து ஆட தடை விதிக்கப்பட்டது.

அரையிறுதியில் சமாளிக்குமா இந்தியா?

இதையடுத்து, 1-1 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்த இந்திய அணி ஷூட் அவுட் முறையில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் வெற்றி பெற்றால் இந்திய அணி நீண்ட வருடத்திற்கு பிறகு ஒலிம்பிக்கில் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

சிறந்த தடுப்பாட்டுக்காரரான அமித் ரோகித்தாஸ் இந்திய அணியின் சிறந்த டிபெண்டர் ஆவார். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியதற்கு ரோகித்தாஸின் சிறப்பான ஆட்டமும் ஒரு காரணம் ஆகும். இந்த நிலையில், அரையிறுதியில் ரோகித் தாஸ் இல்லாமல் இந்திய அணி களமிறங்குவது இந்திய அணிக்கு பெரும் சவாலான ஒன்றாகும். மேலும், அவருக்கு பதிலாக இன்று அரையிறுதியில் யார் களமிறங்குவார்? ரோகித் தாசுக்கு நிகராக அவர் ஆடுவாரா? என்ற பல சவால்கள் தற்போது இந்திய அணி முன்னால் நிற்கிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது முதல் இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget