மேலும் அறிய

வழி தெரியாமல் தொலைந்தவருக்கு டாக்சி கட்டணம்.. வழிகாட்டியை கண்டுபிடித்து ஒலிம்பிக் வீரர் நெகிழ்ச்சி (வைரல் வீடியோ)

ஜமைக்கா வீரர் ஹன்ஸ்லே பார்ச்மெண்ட் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக தவறான பேருந்தில் ஏறி வேறு மைதானத்திற்கு சென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகளில் 110 மீட்டர் தடை ஓடத்தில் ஜமைக்காவைச் சேர்ந்த ஹன்ஸ்லே பார்ச்மெண்ட் தங்கப்பதக்கத்தை வென்றார். இவர் பந்தைய தூரத்தை 13.04 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இறுதிப் போட்டி ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக 110 மீட்டர் தடை ஓடத்தின் அரையிறுதி போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு செல்ல ஹன்ஸ்லே பார்ச்மெண்ட் தவறான பேருந்தில் ஏறி வேறு ஒரு மைதானத்திற்கு சென்றுள்ளார். அப்போது செய்வது அறியாமல் தவித்த அவருக்கு ஒரு தன்னார்வலர் உதவியுள்ளார். அவர் என்ன செய்தார். அவருக்கு பார்ச்மெண் திரும்பி என்ன செய்தார்?

பார்ச்மெண்ட் அப்போது என்ன செய்வது என்பது தெரியாமல் நின்று உள்ளார். அரையிறுதிப் போட்டியில் ஓடவில்லை என்றால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாது என்பதால் அவர் மிகுந்தப் பதற்றத்துடன் இருந்துள்ளார். அந்த சமயத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உதவும் தன்னார்வலரான இளம் பெண் ஒருவர் பார்ச்மெண்ட்டை பார்த்து விஷயத்தை தெரிந்து கொண்டுள்ளார். அவர் செல்ல வேண்டிய இடத்திற்கான சரியான கார் டெக்ஸியை பிடித்து அதற்கான பணத்தையும் பார்ச்மெண்ட் இடம் கொடுத்துள்ளார். அவர் அதை வைத்து சரியான நேரத்தில் அரையிறுதிக்கு சென்று பங்கேற்று உள்ளார். அதன்பின்னர் அடுத்த நாள் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கதையும் வென்று அசத்தினார். 

அதன் பின்னர் அவர் மீண்டும் அதே இடத்திற்கு சென்று உதவி செய்த அந்த நபரைச் சந்தித்து தன்னுடைய தங்கப்பதக்கத்தை காட்டினார். அத்துடன் தான் பதக்கம் வெல்ல அவர் செய்த உதவிதான் மிகப்பெரியது எனக் கூறினார். அத்துடன் அப்பெண்ணிற்கு தன்னுடைய சார்பில் பரிசு ஒன்றையும் கொடுத்தார். மேலும் அவர் அன்று கொடுத்த டேக்ஸி பணத்தையும் அவர் திரும்பி கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவாக செய்துள்ளார். அவருடைய வீடியோவை பலரும் பார்த்து ரசித்து உள்ளனர். 

அத்துடன் தற்போது வரை அந்த வீடியோவை 2.96 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் 1.66 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் ஜமைக்கா தடகள வீரரின் நன்றி மறவா பண்பையும் பலரும் பாராட்டி வருகின்றனர். தடகள வீரரின் செயல் அந்த பெண்ணை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இருவரும் கடைசியாக ஒரு நிழற்படத்தையும் எடுத்துள்ளனர். 

மேலும் படிக்க: 2 முறை கொரோனா.. வாமிட்.. டிப்ரெஷன்.. நான் உடைஞ்சு போயிருக்கேன் - மனம்திறந்த வினேஷ் போகாட்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget