Paris Olympics 2024:ஒலிம்பிக் ரசிகர்களே அலார்ட்.. இந்தியாவிற்கான ஹாக்கி போட்டிகள் எப்போது!முழு டேட்டா இதோ
பாரீஸ் ஒலிம்பிக் 2024 இந்திய ஆண்கள் அணிக்கான முழுமையான ஹாக்கி அட்டவணையை இங்கே பார்ப்போம்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பிரான்ஸ் தலை நகர் பாரீஸில் 33 வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இன்று (ஜூலை 26) பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் 117 தடகள வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தை நோக்கி களம் காண்கின்றனர். இதில் இந்திய ஆண்கள் அணிக்கான முழுமையான ஹாக்கி அட்டவணையை இங்கே பார்ப்போம்:
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி:
கோல்கீப்பர்: பிஆர் ஸ்ரீஜேஷ்
டிஃபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங், சுமித், சஞ்சய்
மிட்பீல்டர்கள்: ராஜ்குமார் பால், ஷம்ஷேர் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத்
முன்கள வீரர்கள்: அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், மந்தீப் சிங், குர்ஜந்த் சிங்
மாற்று வீரர்கள்: நீலகண்ட சர்மா, ஜுக்ராஜ் சிங், கிரிஷன் பகதூர் பதக்
அட்டவணை:
நாள் மற்றும் தேதி | அணிகள் | பிரிவு | நேரம் |
ஜூலை 27, சனிக்கிழமை | இந்தியா vs நியூசிலாந்து | பிரிவு பி |
9:00 PM |
திங்கட்கிழமை, ஜூலை 29 | இந்தியா vs அர்ஜென்டினா | பிரிவு பி | மாலை 4:15 |
செவ்வாய், ஜூலை 30 | இந்தியா vs அயர்லாந்து | பிரிவு பி | மாலை 4:45 |
வியாழன், ஆகஸ்ட் 1 | இந்தியா vs பெல்ஜியம் | பிரிவு பி | பிற்பகல் 1:30 |
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 2 | ஆஸ்திரேலியா vs இந்தியா | பிரிவு பி | மாலை 4:45 |
ஆகஸ்ட் 4, ஞாயிறு | முடிவு செய்ய வேண்டும் | கால்-இறுதி | 1:30 முதல் (இந்தியாவின் தகுதியைப் பொறுத்து நிலையான நேரம் இல்லை) |
செவ்வாய், ஆகஸ்ட் 6 | முடிவு செய்ய வேண்டும் | அரை இறுதி | 1:30 முதல் (இந்தியாவின் தகுதியைப் பொறுத்து நிலையான நேரம் இல்லை) |
ஆகஸ்ட் 8 வியாழன் | முடிவு செய்ய வேண்டும் | இறுதி | 10:30 PM |
இந்திய ஹாக்கி ஆண்கள் அணியின் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா?
இந்தியாவில் உள்ள ரசிகர்களுக்காக பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 இல் இந்திய ஹாக்கி ஆண்கள் அணியின் போட்டிகள் Sports18 நெட்வொர்க்கில் நேரலையாக ஒளிபரப்பப்படும், மேலும் லைவ் ஸ்ட்ரீமிங் JioCinema செயலியில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: Paris Olympics 2024:அன்று வெள்ளி வென்ற வீராங்கனை.. பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மீரா பாய் சானு!
மேலும் படிக்க: Paris Olympics 2024:பாரீஸ் ஒலிம்பிக்..தங்கம் வெல்ல காத்திருக்கும் லோவ்லினா போர்கோ