மேலும் அறிய

‛அன்லிமிடட் பீர்... டேங்க் முழுக்க பெட்ரோல்... ஒலிம்பிக் வின்னர்களுக்கு உலக நாடுகள் அறிவித்த ஆச்சர்ய பரிசுகள் இதோ!

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 1 கோடி ரூபாய் பரிசும் நீரஜ் சோப்ரா வீசிய 87.58 மீட்டரை குறிக்கும் வகையில் 8758 என்ற நம்பரில் ஒரு ஜெர்ஸியையும் வெளியிட உள்ளதாக கூறியுள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இம்முறை ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களுடன் இந்தியா 47ஆவது இடத்தை பிடித்துள்ளது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து, 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் தங்கம் வென்றுள்ளது. ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றார்.

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றது. நீரஜின் சொந்த மாநிலமான ஹரியானாவில் அவருக்கு 6 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசு சார்பில் அவருக்கு 2 கோடி ரூபாய் பரிசும், மணிப்பூர் அரசு சார்பில் 1 கோடி ரூபாய் பரிசும், பிசிசிஐ சார்பில் 1 கோடி ரூபாய் பரிசும் வழங்கவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியும் தன்னுடைய பங்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசும் நீரஜ் சோப்ரா வீசிய 87.58 மீட்டரை குறிக்கும் வகையில் 8758 என்ற நம்பரில் ஒரு ஜெர்ஸியையும் வெளியிட உள்ளதாக கூறியுள்ளது. 

‛அன்லிமிடட் பீர்... டேங்க் முழுக்க பெட்ரோல்... ஒலிம்பிக் வின்னர்களுக்கு உலக நாடுகள் அறிவித்த ஆச்சர்ய பரிசுகள் இதோ!

பிரபல விமான சேவை நிறுவனமான இன்டிகோ 2021 ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 2022 ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நீரஜ் சோப்ரா தன்னுடைய விமான பயணங்களில் கட்டணம் இன்றி பயணம் செய்ய ஒரு சலுகையை அறிவித்துள்ளது. இவை தவிர பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய மகேந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 ரக கார் ஒன்று நீரஜ் சோப்ராவிற்கு பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுகளும், அந்தந்த நாட்டு ஒலிம்பிக் வின்னர்களுக்கு பல்வேறு பரிசுகளை அறிவித்துள்ளது. வாழ்நாள் முழுவதும் இலவசமாக பீர் வழங்கப்படும் என்பது முதல் இலவச பெட்ரோல், பொது போக்குவரத்திற்கான இலவச பயணச்சீட்டு போன்ற சுவாரஸ்யமான பரிசுகளையும் வழங்கியுள்ளதன் லிஸ்ட் இதோ!

‛அன்லிமிடட் பீர்... டேங்க் முழுக்க பெட்ரோல்... ஒலிம்பிக் வின்னர்களுக்கு உலக நாடுகள் அறிவித்த ஆச்சர்ய பரிசுகள் இதோ!

இந்தோனேசியா: டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இரட்டையர் மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு, இந்தோனேசிய அரசு சார்பில் ரொக்கப் பரிசும், வாழ்நாள் முழுவதும் இலவச கோலா உருண்டைகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், ஒரு வீராங்கனைக்கு இலவச வீடு மற்றும் ஐந்து மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஹாங்காங்: ஹாங்காங்கில் நாட்டில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு, வாழ்நாளுக்கும் இலவச இரயில் போக்குவரத்திற்கான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

இதே போல, கடந்த 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு அந்நாட்டு அரசு, வாழ்நாளுக்கும் இலவச சாசேஜ்கள் வழங்குவதாக அறிவித்தது. 

இது போல, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர் வீராங்கனைகளுக்கு உலகின் பிற நாடுகள் அதிக பரிசுத் தொகைகளை அறிவித்துள்ளன. அந்த லிஸ்ட் இதோ! தகவல்: யூஎஸ்ஏ டுடே செய்தி தளம். 

‛அன்லிமிடட் பீர்... டேங்க் முழுக்க பெட்ரோல்... ஒலிம்பிக் வின்னர்களுக்கு உலக நாடுகள் அறிவித்த ஆச்சர்ய பரிசுகள் இதோ!

2016 ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு, ஜெர்மனி அரசு வாழ்நாளுக்கும் இலவசமாக பீர் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதே ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, ரஷ்ய அரசு சார்பில் சொகுசு கார்கள், அபார்ட்மெண்டுகள் மற்றும் ஆளுக்கு ஒரு பந்தய குதிரையை வழங்கியது. 

தென் கொரிய நாட்டை பொருத்தவரை, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அந்நாட்டு வீரர்களுக்கு மிலிட்டரியில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதிரடியாக, ஒலிம்பிக்கில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்நாளுக்கும் மாத சம்பளம் 1,200 டாலர் வழங்கப்படும் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஃபிலிப்பைனஸ் நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகளுக்கு சொகுசு அபார்ட்மெண்டுகள், ரெசார்ட், இலவச பெட்ரோல், இலவச விமான சேவை என பரிசுகளை அடுக்கியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget