மேலும் அறிய

Hockey World Cup: உலகக் கோப்பையை வெல்லுங்க.. ஒரு கோடியை அள்ளுங்க.. இந்திய ஹாக்கி அணிக்கு ஆஃபர் கொடுத்த முதல்வர்!

உலக தரவரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ள இந்திய ஹாக்கி அணி, வருகின்ற ஜனவரி 13ம் தேதி தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. 

15வது ஹாக்கி உலக கோப்பை தொடர் வருகின்ற ஜனவரி மாதம் 13 ம் தேதி தொடங்கி 29 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. 

இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால், சொந்த மண்ணில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய ஹாக்கி அணி களமிறங்கும். அதேபோல், இந்திய ரசிகர்கள் பார்வையும், ஏக்கமும் அதிகரித்துள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ’டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் போன்ற வலுவான அணிகளும் உள்ளது. 

இதையடுத்து, உலக தரவரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ள இந்திய ஹாக்கி அணி, வருகின்ற ஜனவரி 13ம் தேதி தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது. 

இந்தநிலையில், உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு முன்னதாக இந்திய ஆண்கள் ஹாக்கி அணியை ஊக்குவிக்கும் வகையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்,  உலகக் கோப்பையை இந்திய ஹாக்கி அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். 

ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம் வளாகத்தில் உலகக் கோப்பை கிராமத்தை திறந்து வைக்கும்போது பட்நாயக் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

உலகக் கோப்பை கிராமம்: 

உலகக் கோப்பை கிராமம் ஒன்பது மாதங்களுக்குள் உருவாக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. அனைத்து வீரர்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் 225 அறைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒடிசாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த முறை, மெகா ஹாக்கி போட்டி புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் ஜனவரி 13 முதல் 29 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஊக்கத்தொகை அறிவித்த ஹாக்கி இந்தியா அமைப்பு:

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஹாக்கி இந்தியா அமைப்பு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

அதன்படி, ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மகுடம் சூடினால் ஒவ்வொரு வீரர்களும் தலா ரூ. 25 லட்சமும், அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்தது. தொடர்ந்து, வெள்ளிப்பதக்கம் வென்றால் வீரர்களுக்கு தலா ரூ. 15 லட்சமும், உதவியாளர்களுக்கு 3 லட்சமும் வழங்கப்படும் என்றும், வெண்கலப்பதக்கத்தை வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு தலா 2 லட்சமும் அளிக்கப்படும் என ஹாக்கி இந்தியா செயற்குழு கூட்டத்தில் அறிவித்தது.

இதுகுறித்து ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டிர்கி கூறுகையில்,” சீனியர் உலகக் கோப்பை போட்டியின் பதக்க மேடையில் ஏறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த ஊக்கத்தொகையானது வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறோம். உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பதக்கம் வெல்லும்போது நிச்சயம் அது நமது வீரர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருக்கும். அவர்கள் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட எங்களது வாழ்த்துகள்” என தெரிவித்தார். 

இந்தியா கடைசியாக கடந்த 1975 ம் ஆண்டு மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டத்தை வென்றது. அதன்பிறகு, இந்திய ஹாக்கி அணி இதுவரை எந்தவொரு பட்டத்தை வென்றதில்லை. 

இதுவரை உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி மூன்று முறை பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 1971 ம் ஆண்டு வெண்கலப் பதக்கத்தையும், 1975 ம் ஆண்டு பட்டத்தையும், 1973 இல் ஆம்ஸ்டெல்வீனில் வெள்ளிப் பதக்கத்தைப் பதிவு செய்தது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget