மேலும் அறிய

National Sports Day 2023: இந்தியாவில் எத்தனை வகையான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன? முழு பட்டியல் இங்கே!

இந்தியாவிற்காக விளையாட்டு போட்டிகளின் சிறந்து விளங்கி பல்வேறு சாதனைகள் புரியும் பல்வேறு விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மொத்தம் 7 வெவ்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், விளையாட்டில் சிறந்து விளங்கும் தேசத்தின் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, இந்தியாவிற்காக விளையாட்டு போட்டிகளின் சிறந்து விளங்கி பல்வேறு சாதனைகள் புரியும் பல்வேறு விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மொத்தம் 7 வெவ்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை என்னென்ன என்பதை பற்றிய முழு விவரங்களை கீழே காணலாம்.. 

1. மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது:

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது (முன்னர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது) இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருதாகக் கருதப்படுகிறது. இந்த விருதை முதலில் வென்றவர் இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வானந்தன் ஆனந்த். கடந்த நான்கு ஆண்டுகளாக விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு இந்த ’மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது’ வழங்கப்படுகிறது. இதில், விருது வாங்கும் வீரருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

2. அர்ஜுனா விருது:

அர்ஜுனா விருதானது கடந்த 1961 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1991-92 இல் கேல் ரத்னா அறிவிக்கப்படுவதற்கு முன்பு நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதாக அர்ஜூனா விருதே பார்க்கப்பட்டது. அர்ஜுனா விருது வென்ற வீரர்களுக்கு அர்ஜுனன் சிலை, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த அர்ஜூனா விருதை முதல் முதலில் வாங்கியவர் ஹாக்கி வீராங்கனையான அன்னா லம்ஸ்டன் ஆவார். கடந்த 1961 ஆம் ஆண்டில் 20 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

3. துரோணாச்சார்யா விருது:

இந்தியாவில் கடந்த 1985 ம் ஆண்டு முதல் துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது தலைசிறந்த வீரர்களை உருவாக்கி இந்திய நாட்டிற்கு அர்பணித்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதை வெல்லும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியாரின் வெண்கலச் சிலை, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். தடகளப் பயிற்சியாளர் ஓ.எம்.நம்பியார் இந்த விருதைப் பெற்ற முதல் பயிற்சியாளர். இவர்தான் நமக்கு பி.டி.உஷாவை தந்தவர். 

4. மேஜர் தயான் சந்த் விருது

இது மேஜர் தயான் சந்தின் பெயரால் வழங்கப்படும் மற்றொரு உயரிய விருதாகும். இது விளையாட்டில் வாழ்நாள் சாதனை விருதாக வழங்கப்படுகிறது. இந்த விருதை வெல்பவர்களுக்கு தயான் சந்த் சிலை, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். குத்துச்சண்டை வீரர் ஷாஹுராஜ் பிராஜ்தார், இந்திய ஹாக்கி வீரர் அசோக் திவான் மற்றும் இந்திய பெண்கள் கூடைப்பந்து வீராங்கனை அபர்ணா கோஷ் ஆகியோர் இந்த விருதை முதன் முதலில் பெற்றனர்.

5. மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை

மௌலானா அபுல் கலாம் ஆசாத் டிராபி அல்லது MAKA டிராபி என்பது இந்தியாவின் பழமையான தேசிய விளையாட்டு விருது ஆகும். இந்த விருதானது கடந்த 1956-57 முதல் வழங்கப்படுகிறது. கடந்த 12 மாதங்களில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் சிறந்த விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 

6. ராஷ்ட்ரிய கேல் ப்ரோட்சஹான் புருஸ்கார்

இந்த விருது 2009 ஆம் ஆண்டில் தேசிய விளையாட்டு விருதுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த விருது நாட்டில் விளையாட்டு மேம்பாடு மற்றும் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது.

7. டென்சிங் நார்கே தேசிய சாகச விருது

நேபாளி வம்சாவளியைச் சேர்ந்த இந்தியரான டென்சிங் நோர்கே, உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இருவரில் ஒருவர். சாகச நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியவர்களை அங்கீகரித்து 1994 ஆம் ஆண்டு அவரது நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: ’’இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்’’ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவால் அதிர்ச்சி- பரபரப்பு பின்னணி!
Donald Trump: ’’இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்’’ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவால் அதிர்ச்சி- பரபரப்பு பின்னணி!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நயினார் மகனுக்கு பதவி! வெளுத்தெடுத்த அலிஷா அப்துல்லா! ”அண்ணாமலைக்காக வந்தேன்”
PMK Lawyer Attack Police : போலீஸ் கன்னத்தில் பளார்!எல்லைமீறிய பாமககாரர் பகீர் வீடியோ
Ungaludan Stalin | உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த அவலம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்
MK Stalin Germany | “வாங்க ஸ்டாலின் சார்” கான்வாய் அனுப்பிய அமைச்சர் ஜெர்மனியில் கெத்துகாட்டிய CM
Inbanithi Red Giant | உதயநிதி பாணியில் மகன்! இன்பநிதி சினிமாவில் ENTRY! வெளியான முக்கிய அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: ’’இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்’’ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவால் அதிர்ச்சி- பரபரப்பு பின்னணி!
Donald Trump: ’’இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம்’’ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவால் அதிர்ச்சி- பரபரப்பு பின்னணி!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
”வெளியேறும் தலைவர்கள்! பாஜக-அதிமுக கூட்டணி: மூழ்கும் கப்பல்!செல்வபெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு!
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
New Launched Scooters: சந்தைக்கு வரும் 3 புது ஸ்கூட்டர்கள்.. Suzuki முதல் BGauss வரை - விலையும், மைலேஜும் எப்படி?
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன்,  தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
தமிழக கடல் உணவு ஏற்றுமதிக்கு பேரிடி! தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும் இழப்பு?
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
மிஸ் பண்ணிடாதீங்க; சிவில் சர்வீஸ் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம்- அரசே அழைப்பு!
Sengottaiyan Press Meet : ’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
’EPSக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன்’ இதுதான் காரணம்..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.