Wimbledon Vijay Poster: அப்படி போடு.. அப்ப ரஜினி, இப்ப விஜய்.. விம்பிள்டன் ஷேர் செய்த போஸ்டரால் லோகேஷ் கனகராஜ் குஷி..!
விம்பிள்டன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரஸை பாராட்டி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் போஸ்டர், நடிகர் விஜயின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
விம்பிள்டன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரஸை பாராட்டி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் போஸ்டர், நடிகர் விஜயின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
விம்பிள்டன் சாம்பியன்:
நடப்பண்டு விம்பிள்டன் தொடரின் ஆடவர் இறுதிப் போட்டில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த 20 வயது வீரரான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவர் வெல்லும் முதல் விம்பிள்டன் பட்டம் இதுவாகும். யாருமே எதிர்பாராத விதமாக நோவக் ஜோகோவிச்சை விழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸிற்கு எல்லா தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தான் விம்பிள்டன் அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
MASTER 🔥
— Wimbledon (@Wimbledon) July 16, 2023
A NEW 🤴 OF #Wimbledon pic.twitter.com/PViwtsEXEt
மாஸ்டர் போஸ்டர்:
அதன்படி, சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸை வாழ்த்தி விம்பிள்டன் அமைப்பு ஒரு போஸ்டரை வடிவமைத்துள்ளது. அதில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்று, கருப்பு நிற சட்டை அணிந்த ஒரு குழுவிற்கு மத்தியில் அல்காரஸ் நின்று அமைதி என்று கூறுவது போல வாய் மீது வைரல் வைத்துள்ளார். அந்த படத்தை டிவிட்டரில் பதிவிட்ட விம்பிள்டன் அமைப்பு, விம்பிள்டனின் புதிய சாம்பியன் எனவும், அல்காரஸை மாஸ்டர் என குறிப்பிட்டுள்ளது.
ரிடிவீட் செய்த லோகேஷ் கனகராஜ்:
விம்பிள்டன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு இணையத்தில் பரவி வைரலாக, இயக்குனர் லோகேஷ்கனகராஜ் அந்த போஸ்டை ரி-டிவீட் செய்துள்ளார். விஜயை புதிய பிராண்ட் எனவும் கமெண்ட் செய்துள்ளார். உலகின் மிகப்பெரிய டென்னிஸ் அமைப்புகளில் ஒன்றான விம்பிள்டன் விஜயின் மாஸ்டர் பட ரெஃப்ரன்ஸில் வெளியிட்ட அந்த போஸ்டரை, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
அன்று தலைவா.. இன்று மாஸ்டர்..
முன்னதாக நடப்பாண்டு விம்பிள்டன் தொடரை காண வந்த முன்னாள் நட்சத்திர வீரரான ரோஜர் ஃபெடரரின் புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட விம்பிள்டன் அமைப்பு அவரை தலைவா என குறிப்பிட்டு இருந்தது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதனை தொடர்ந்து தற்போது அடுத்த தலைமுறை டென்னிஸ் நாயகனான உருவாகி வரும், கார்லோஸ் அல்காரஸை விம்பிள்டன் அமைப்பு விஜயின் மாஸ்டர் படத்தை குறிப்பிட்டு மாஸ்டர் என பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விறுவிறு லியோ:
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரமாண்ட பொருட்செலவில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பெரும் நட்சத்திர பட்டாளமே அடங்கியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி படம் வெளியாக உள்ளது.