Malaysian Masters Badminton: மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் ஜப்பான் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்ற பிரணாய்
மலேசிய ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரணாய் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், பிரணாய், சாய் பிரணீத், கஷ்யப் உள்ளிட்ட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் பி.வி.சிந்து, பிரணாய், கஷ்யப், சாய் பிரணீத் ஆகியோர் வெற்றி பெற்றனர். இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து மற்றும் பிரணாய் மட்டும் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்திய வீரர் பிரணாய் உலக தரவரிசையில் 14வது இடத்திலுள்ள ஜப்பான் வீரர் கண்டாவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதன்காரணமாக முதல் கேம் 21 புள்ளிகளை தாண்டி ஆட்டம் சென்றது. இறுதியில் பிரணாய் 25-23 என்ற கணக்கில் வென்றார்.
News Flash:
— India_AllSports (@India_AllSports) July 8, 2022
H.S Prannoy storms into Semis of #MalaysiaMasters with hard-fought 25-23, 22-20 win over WR 14 Kanta Tsuneyama in a match that lasted one hour.
👉 Prannoy will take on WR 13 NG Ka Long Angus in Semis tomorrow against whom he has won the last 3 matches. pic.twitter.com/bYNkR4ScNc
அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமிலும் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்தனர். இறுதியில் இந்த கேமையும் பிரணாய் 22-20 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 25-23,22-20 என்ற கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தி அசத்தினார். பிரணாய் நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 13வது இடத்திலுள்ள லாங்கை எதிர்த்து விளையாட உள்ளார். கடந்த மூன்று முறை லாங்கை பிரணாய் வீழ்த்தியுள்ளார். ஆகவே நாளைய அரையிறுதி போட்டி பெரும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நாளை வெற்றி பெறும் பட்சத்தில் பிரணாய் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடுவார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்