Khel Ratna Award 2021: 12 விளையாட்டு வீரர்களுக்கு கேல்ரத்னா விருது அறிவிப்பு: யார் யார் முழுவிபரம் இதோ!
நவம்பர் 13-ம் தேதி டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், விளையாட்டில் சாதித்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் டோக்கியோ பாராலிம்பிக் ஆகிய இரண்டிலும் இந்திய வீரர் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். முதலில் பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி 7 பதக்கங்களை வென்று இருந்து. அதன்பின்னர் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் 5 தங்கப்பதக்கம் உட்பட இந்திய அணி 19 பதக்கங்களை வென்றது.
இந்நிலையில், விளையாட்டு துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதிற்கு முன்னணி விளையாட்டு நட்சதிரங்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். இப்போது, இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13-ம் தேதி டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், விளையாட்டில் சாதித்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
National Sports Award will be given in New Delhi on November 13. Major Dhyan Chand Khel Ratna Award will be given to 12 sportspersons including Neeraj Chopra (Athletics), Ravi Kumar (Wrestling), Lovlina Borgohain (Boxing) and Sreejesh PR (Hockey) pic.twitter.com/40p0mj6hsU
— ANI (@ANI) November 2, 2021
1. நீரஜ் சோப்ரா (தடகளம்)
2. ரவி குமார் (மல்யுத்தம்)
3. லவ்லீனா (குத்துச்சண்டை)
4. ஸ்ரீஜேஷ் (ஹாக்கி)
பாராலிம்பிக் வீரர் வீராங்கனைகள்
5. அவானி லெக்ரா
6. ப்ரமோத் பகத்
7. கிருஷ்ணா நகர்
8. மணிஷ் நார்வால்
9. சுமித் அண்டில்
10. மிதாலி ராஜ் (கிரிக்கெட்)
11. சுனில் செத்ரி (கால்பந்து)
12. மன்ப்ரீத் சிங் (ஹாக்கி)
முன்னதாக விளையாட்டு துறையில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டு வந்த ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை இந்தாண்டு மத்திய அரசு பெயர் மாற்றியது. அதன்படி இந்தாண்டு முதல் விளையாட்டு துறையின் உயரிய விருது மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்