Lionel Messi : "அந்த அங்கி எனக்கு வேணும்.. எத்தனை கோடினாலும் தரேன்." மெஸ்ஸிக்கு கோரிக்கை வைத்த வக்கீல்..!
உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, கத்தார் எமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி மெஸ்ஸிக்கு கோப்பையை வழங்கி பிஷ்ட் என்னும் சடங்கு அங்கியை அணிவித்து கௌரவித்தார்.
உலகக்கோப்பை அங்கி:
2022 ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான அர்ஜெண்டினா அணி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. வெற்றிக்கு பிறகு, கத்தார் எமிர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி மெஸ்ஸிக்கு கோப்பையை வழங்கி பிஷ்ட் என்னும் சடங்கு அங்கியை அணிவித்து கௌரவித்தார்.
பிஷ்ட் என்பது எமிர்கள், மன்னர்கள், இமாம்கள் மற்றும் பலருக்கு வழங்கப்படும் சிறப்பு உடையாகும். ஆடை பொதுவாக கருப்பு நிறத்தில் தங்க நிற ஜரிகையுடன் இருக்கும். அர்ஜெண்டினா அணிக்காக ஏழு கோல்களை அடித்ததுடன், கோல் அடிக்க சக போட்டியாளருக்கு மூன்று உதவிகளையும் செய்தார், இதன்மூலம் ஃபிபா உலகக் கோப்பை தொடரில் தங்கப்பந்தும் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.
Με την έξυπνη σιτα! 😂 #FIFAWorldCupGR pic.twitter.com/5j1suXvh3n
— Giorgos Kosts ☘️ (@GiorgosKosts) December 18, 2022
மெஸ்ஸி அணிந்த அங்கிக்கு ரூ.8.2 கோடி:
கத்தாரில் மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட பிஷ்ட் அங்கியை, ஓமன் வக்கீல் பர்வானி ரூ. 8.2 கோடிக்கு வாங்க முன் வந்துள்ளார். அந்த 'அங்கி வீரத்தையும், அன்பையும் குறிப்பதாக உள்ளது. இதை எனக்கு வழங்க முடியுமா? கூடுதலாக பணம் தேவை என்றாலும் தர தயாராக உள்ளேன்' என அவர் கூறியுள்ளார்.
அங்கியின் சிறப்பு என்ன..?
பிஷ்ட் அணிவித்தது தனி மனிதன் ஒழுக்கத்தையும், நாட்டின் மரியாதையை செலுத்துவதற்கான செயலாக இருந்தாலும், இந்த நடவடிக்கை பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றது.
Gowning #Messi with a“Bisht” drove many Euro-Centric supremacists Crazy. Do they know that their graduation gowns came from the Arabian gown? A tradition Muslims started in 859 at Al-Qarawiyyan University; founded by a Muslim Woman by the way. Too much for your colonial fantasy? pic.twitter.com/cXYp1rBKg2
— لولوة الخاطر Lolwah Alkhater (@Lolwah_Alkhater) December 24, 2022
வளைகுடா நாட்டின் உதவி வெளியுறவு மந்திரி லோல்வா அல்-காதர், இந்த கூற்றுகளுக்கு இப்போது பதிலளித்துள்ளார், அவர் சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “ மெஸ்ஸிக்கு பிஷ்ட் கவுனிங் அணிவித்தது பல மத குருக்களை கஷ்டப்படுத்தியது. அவர்களின் பட்டமளிப்பு கவுன்கள் அரேபிய கவுனில் இருந்து வந்தது என்பது அவர்களுக்குத் தெரியுமா? 859 இல் அல்-கராவியன் பல்கலைக்கழகத்தில் முஸ்லீம்கள் தொடங்கிய பாரம்பரியம்; ஒரு முஸ்லீம் பெண்ணால் நிறுவப்பட்டது. உங்கள் காலனித்துவ கற்பனைக்கு அதிகமாகவா?” என்று கேள்வி எழுப்பினார்.