Asian Indoor Championships: ஆசிய தடகள சாம்பியன்ஷிப்; புதிய சாதனை படைத்த இந்திய வீரர் ஆல்ட்ரின் - உறுதியான வெள்ளி..!
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் (Jeswin Aldrin) தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில், தேசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளார் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின். அதன்படி, போட்டியில் தனது இரண்டாவது முயற்சியில், அவர் 7.97 மீட்டர் தூரம் தாண்டி அசத்தியுள்ளார். இதன் மூலம், இந்த தொடரில் இந்திய அணிக்கு நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் உறுதி செய்தார்.
நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில், 7.97 மீட்டர் தாண்டியதன் மூலம் 7.93 மீட்டர் தூரத்தை தாண்டியிருந்த தனது முந்தைய தேசிய சாதனையை அவரே தகர்த்தார். மொத்தமாக வழங்கப்பட்ட 6 வாய்ப்புகளில் 2 முறை மட்டுமே பவுல் செய்யாமல் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார்.
அதேநேரம், சீன தைபேயின் லின் யு-டாங் 8.02 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தையும், சீனாவின் ஜாங் மிங்குன் 7.92 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார். இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 21 வயதான ஜெஸ்வின் ஆல்ட்ரின், 7.97 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
Asian Indoor Athletics C'ships:
— The Bridge (@the_bridge_in) February 12, 2023
Jeswin Aldrin sets new indoor long jump NR in his second attempt in the final with a jump of 7.97m, up from 7.93m he set in qualifying! 💥🇮🇳#Athletics pic.twitter.com/aEnDo2E2VK