James Anderson Record: 650 விக்கெட்டுகள்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஃபாஸ்ட் பவுலரான ஆண்டர்சன் 650வது விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டுகள் எடுத்த முதல் பேசர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஃபாஸ்ட் பவுலரான ஆண்டர்சன் 650வது விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டுகள் எடுத்த முதல் பேசர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக 600வது விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை படைத்த முதல் டெஸ்ட் வீரர் என்ற அந்தஸ்தையும் ஆண்டர்சன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இனி அடுத்த இலக்கு 700வது விக்கெட்டாக தரும் இருக்கும் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன்னின் ரசிகர்கள் பெருமிதம் பொங்க கூறுகின்றனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலக, புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வலிநடத்திக் கொண்டிருக்கிறார்.
The perfect start and Test wicket number 6️⃣5️⃣0️⃣ for @jimmy9 🙌
— England Cricket (@englandcricket) June 13, 2022
Scorecard & Videos: https://t.co/GJPwJC59J7
🏴 #ENGvNZ 🇳🇿 pic.twitter.com/PLFNZU6P2k
;
இங்கிலாந்து நியூசிலாந்து 2வது டெஸ்ட் தொடக்கத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது டெஸ்ட் கேரியரில் 646 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அப்போது அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டேரில் மிட்செல், டாம் ப்ளண்டல் விளாசிய சதங்களால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 553 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆண்டர்சன் தனது முதல் ஓவரில் ஐந்தாவது பந்தை வீசினார். அந்தப் பந்தில் லாதம் அவுட் ஆனார். அதுதான் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய 650வது விக்கெட் ஆகும்.
39 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது 171வது போட்டியை விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அதிக ஆட்டங்களை விளையாடியவர் என்ற பெருமையையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார். அதேபோல் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முத்தையா முரளிதரன், ஷேர் வார்னேவுக்கு பின்னர் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார். முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இங்கிலாந்து, நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் 211 பந்துகளில் 176 ரன்கள் எடுத்திருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஓலி போப் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை அடித்துள்ளார்.
நியூஸிக்கு எதிராக இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமுள்ளது. டெஸ்ட் தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.