மேலும் அறிய

Euro 2020 | யூரோ கோப்பை 2020-இல், 53 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியனானது இத்தாலி அணி

யூரோ கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணியை 3-2 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி இத்தாலி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐரோப்பிய கண்டத்தின் கால்பந்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க நடத்தப்படும் மிகவும் முக்கியமான கால்பந்து தொடர் யூரோ கோப்பை. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.  ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா கோல் அடித்து அசத்தினார். யூரோ கோப்பை வரலாற்றில் 1 நிமிடம் மற்றும் 56 விநாடிகளில் கோல் அடித்து அதிவேக கோல் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஷா படைத்தார். 

இதன்பின்னர் முதல் பாதி முழுவதும் இத்தாலி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் கை கொடுக்கவில்லை.இரண்டாவது பாதியிலும் இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தனர். ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரர் போனுசி சிறப்பாக கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். அதன்பின்னர் இறுதி வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக இரண்டு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சி எடுபடவில்லை. 

எனவே யூரோ கோப்பை சாம்பியனை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை வைக்கப்பட்டது. இதில் இத்தாலி அணியில் மூன்று வீரர்கள் கோல் அடித்தனர். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் இருவரின் பெனால்டி ஷூட் அவுட்டை இத்தாலி கோல் கீப்பர் டோனருமா சிறப்பாக தடுத்தார். இதன் காரணமாக பெனால்டி ஷூட் அவுட் முறையில் இத்தாலி அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. அத்துடன் 1968ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் யூரோ கோப்பை கால்பந்து தொடரை வென்றது. கிட்டதட்ட 53 ஆண்டுகள் காத்திருந்து இத்தாலி யூரோ கோப்பையை வென்றுள்ளது. 2000ஆம் ஆண்டு மற்றும் 2012ஆம் ஆண்டு இத்தாலி அணி யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து ஏமாற்றியது. 

Euro 2020 | யூரோ கோப்பை 2020-இல், 53 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியனானது இத்தாலி அணி

தற்போது இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அந்த அணி வென்றதை அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை இத்தாலி அணி 34 போட்டிகளில் தோல்வி அடையவில்லை என்ற சாதனையையும் படைத்துள்ளது. நடப்பு யூரோ கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற போர்ச்சுகல் வீரர்  கிறிஸ்டியானா ரொனால்டோவிற்கு தங்க ஷூ பரிசாக வழங்கப்பட்டது. யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணிக்கு 103.5 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு 72.48 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க: Sachin on Copa America: அர்ஜென்டினாவுக்கு வாழ்த்து...பிரேசிலுக்கு ஆறுதல் கூறிய சச்சின்...!

தலைப்பு செய்திகள்

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
National Car Racing : தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப்.! எப்போ தொடங்குகிறது.? எங்கே நடைபெறுகிறது.? வெளியான அறிவிப்பு
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget