UPW-W vs GG-W: இறுதிவரை விறுவிறு... த்ரில் வெற்றி பெற்ற உத்தரபிரதேசம்..! குஜராத் போராடி தோல்வி..!
UPW-W vs GG-W: உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் அணிகள் இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

Background
மகளிர் ஐ.பி.எல். தொடரின் 3வது போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் உத்தரப்பிரதேசம் - குஜராத் அணிகள் மோதுகின்றன.
உத்தரப்பிரதேச அணியை பொறுத்தவரை கேப்டன் அலிசா ஹீலி, துணை கேப்டன் தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரி, சோபி எக்லெஸ்டன், ஷப்னிம் இஸ்மாயில், தாலியா மெக்ராத், ராஜேஸ்வரி கெய்க்வாட், உள்ளிட்டோர் சிறந்த பார்மில் உள்ளனர்.
அதேசமயம் குஜராத் அணியில் கேப்டன் பெத் மூனி, ஹர்லீங் தியோல், ஆஷ்லி கார்ட்னெர், சோபியா டங்லி, அனபெல் சதர்லேண்ட், சினே ராணா, ஹேமலதா என சிறந்த வீராங்கனைகள் இருப்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். இவ்விரு போட்டிகளும் ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகின்றது.
50 ரன்களை கடந்த உத்தரபிரதேச அணி..! வலுவான பார்ட்னர்ஷிப் அமையுமா..?
குஜராத் அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடி வரும் உத்தரபிரதேச அணி 50 ரன்களை எடுத்துள்ளது.
20 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் - தடுமாறும் உத்தரபிரதேசம்
உத்தரபிரதேச அணிக்காக ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் ஹேலி, ஸ்வேதா, மெக்ராத் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 3 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்களை மட்டுமே உபி எடுத்து தடுமாறி வருகிறது.




















