மேலும் அறிய

WIPL 2023: மகளிர் ஐபிஎல்: ஆறு அணிகளுடன் புதுப்பொலிவுடன் களமிறங்கும் மகளிர் அணி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் துவண்டு கிடக்கும் நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு முதல் மீண்டும் மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2008ஆம் ஆண்டு முதன்முறையாக எட்டு அணிகளுடன் தோற்றுவிக்கப்பட்ட ஆடவர் ஐபிஎல் தொடர் இன்று பிரம்மாண்ட வளர்ச்சிபெற்று கோடிகள் புரளும் விளையாட்டுத் தொடராக 10 அணிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

மகளிர் ஐபிஎல்

எனினும் மகளிர் ஐபிஎல் தொடர் மீது ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த பிசிசிஐயிடம் மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018 – 2020காலக்கட்டத்தில் மூன்று அணிகள் கொண்ட மகளிர் ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்தியது.

ஆனால் தொடர்ந்து அப்போட்டிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இந்தியாவின் ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மாறாக மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் துவண்டு கிடக்கும் நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு முதல் மீண்டும் மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐசிசி ஒப்புதல்

இது குறித்து வெளிவந்துள்ள தகவல்களின்படி,  இந்திய கிரிக்கெட் வாரியம் வரும் மார்ச் அல்லது செப்டம்பர் காலக்கட்டத்தில் மகளிர் ஐபிஎல்லை மீண்டும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசியின் ஒப்புதலுக்குப் பிறகு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கடந்த ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியின்போது கூட்டம் நடைபெற்றதாகவும், மார்ச் - ஏப்ரல் அல்லது செப்டம்பர்- அக்டோபர் காலக்கட்டத்தில் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி பெறப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

பிசிசிஐ நிர்வாகிகள் உறுதி

மேலும், 2023ஆம் ஆண்டு முதல் மகளிர் T20 க்கு பதிலாக மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா இருவரும் உறுதிபடுத்தியுள்ளனர்.

முன்னதாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் போன்ற வாரியங்களுடன் பிசிசிஐ இதுகுறித்து கலந்தாலோசித்த நிலையில், மகளிருக்கான முதல் சீசனில் ஆறு அணிகள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாகிஸ்தான் சூப்பர் லீக்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மகளிர் சூப்பர் லீக் போட்டிகளை நடத்த உள்ளதாக முன்னதாக அறிவித்ததையடுத்து, மகளிர் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டிய அழுத்தத்தில் பிசிசிஐ இருந்து வந்தது.

மேலும், இந்தியாவில் மகளிர் T20 போட்டிகளுக்கு எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு முதல் மகளிர் T20 போட்டிகளுக்கு பதிலாக WIPL எனப்படும் மகளிர் ஐபிஎல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget