Virat Kohli Workout Video: பேட்டிங்கில் மட்டுமில்ல வெயிட்லிப்டிங்கிலும் கிங்தான்..! அனுஷ்கா முன்பு அசத்திய விராட்கோலி..!
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் விராட்கோலி ஜிம்மில் வெயிட்லிப்டிங் செய்து அசத்தும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் விராட்கோலி. முன்னாள் கேப்டனான விராட்கோலி பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை உள்ளது. விராட்கோலி எப்போதும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை கொள்பவர். அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் உடற்பயிற்சியில் அக்கறை கொண்டவர்.
இந்த நிலையில், சிக்ஸ்பேக் கொண்ட விராட்கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது விராட்கோலி வெயிட் லிப்டிங் எனப்படும் எடை தூக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார். அவருடன் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அந்த ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்கிறார்.
— Virat Kohli (@imVkohli) May 3, 2022
இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள விராட்கோலி என்னுடைய பேவரைட் அனுஷ்கா சர்மாவுடன் மீண்டும் என்று பதிவிட்டு, எடைதூக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார். விராட்கோலியின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவரை பாராட்டியும், வாழ்த்தியும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாலிவுட்டின் பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்கா சர்மா, தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அனுஷ்கா சர்மா தீவிர கிரிக்கெட் பயிற்சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜூலன் கோஸ்வாமியை நேரில் சந்தித்து ஆலோசனையையும் பெற்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்