மேலும் அறிய

Virat Kohli IPL Record: IPL-ல் அதிக ரன்களை குவித்த முதல் வீரர்.. ரன் மிஷின் விராட் கோலியின் சாதனை!

Virat Kohli IPL Record: ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் விராட் கோலி.

ரன் மிஷின் விராட் கோலி:

இந்திய அணியின் ரன் மிஷின் என்று இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகத்தின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் விராட் கோலி. சர்வதேச அளவில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானவர். அதேபோல் சர்வதேச அளவில் 2010 ஆம் ஆண்டு டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும், டெஸ்ட் போட்டியில் 2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் அறிமுகமானார்.அதன்படி சர்வதேச அளவில் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர், இந்திய அணிக்காக அதிக வெற்றிகளில் பங்கேற்ற வீரர்,ஒருநாள் போட்டிகளில் குறைவான இன்னிங்ஸ்களில் விளையாடி 13000 ஒருநாள் ரன்களை எட்டிய முதல் சர்வதேச வீரர், ஒரு உலகக்கோப்பையில் 700 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர் விராட் கோலி தான்.

ஐ.பி.எல் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்:

அதோடு, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி 20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த முதல் வீரர் மற்றும் 7 ஆயிரம் ரன்களை முதலில் கடந்த வீரராகவும் விராட் கோலி தான் இருக்கிறார். 2023ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்திய விராட் கோலி, 6 அரைசதங்கள் உட்பட 2 சதங்களை விளாசி 639 ரன்களை குவித்து அசத்தினார். அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், 7000 ரன்களை கடந்த முதல் வீரர் மற்றும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

அந்தவகையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகிறார் விராட் கோலி. இதுவரை 237 .பி.எல் போட்டிகளில் 229 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் இவர் 7263 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 சதங்கள் மற்றும் 50 அரைசதங்கள் அடங்கும். அந்தவகையில் தான் விளையாடிய ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரையில் 643 பவுண்டரிகள் மற்றும் 234 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள விராட் கோலி அதிகபட்சமாக 113 ரன்களை விளாசியிருக்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு மட்டுமே கோலி விளையாடி வருகிறார். முன்னதாக, ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஷிகர் தவான் 6617 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் 6397 ரன்களுடன் டேவிட் வார்னர், நான்காவது இடத்தில் 6211 ரன்களுடன் ரோகித் சர்மா மற்றும் ஐந்தாவது இடத்தில் 5528 ரன்களுடன் சுரேஷ் ரெய்னா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: IND vs ENG: இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா! இளம் வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோகித் சர்மா!

மேலும் படிக்க: Tamil Thalaivas vs Bengal Warriors: பெங்கால் வாரியர்ஸ் அணியை ஓட விட்ட தமிழ் தலைவாஸ்! கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget