IPL Media Rights: தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டிகள்! அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தச் சேனல்தான்...!
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஐ.பி.எல் போட்டிகளை தொலைகாட்சியில் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் இந்தியா தக்கவைத்துக் கொண்ட அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது டிவிட்டர் தளத்தில்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஐ.பி.எல் போட்டிகளை தொலைகாட்சியில் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் இந்தியா தக்கவைத்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது டிவிட்டர் தளத்தில்தில் தெரிவித்துள்ளார். 23,575 கோடி கொடுத்து ஸ்டார் இந்தியா நிறுவனம் உரிமையை தக்கவைத்துக் கொண்டது உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமத்திற்கான ஏலம் ஆன்லைனில் நடைபெற்றது. இதில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் ஆகியவற்றிற்கான ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் டிஸ்னி ஸ்டார் இண்டியா, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இண்டியா, ஸீ எண்டர்டெய்ன்மெண்ட் எண்டர்ப்ரைஸஸ் லிமிட்டெட், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் 18 ஆகிய நிறுவனங்கள் கலந்துகொண்டன.
இந்த ஏலத்தில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் இரண்டிற்கும் சேர்த்து அடிப்படைத் தொகையாக 30,340 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாள் முடிவில் 43,050 கோடியில் ஏலம் முடிவடைந்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்திற்கான பேக்கேஜ் ஏ பிரிவிற்கு அடிப்படை விலையாக 18,130 கோடி ரூபாயும், டிஜிட்டல் உரிமத்திற்கான பேக்கேஜ் பி க்கு அடிப்படை விலையாக 12,210 கோடி ரூபாயும் என மொத்தமாக 30,340 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டிற்கும் சேர்த்து 43,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் ஒரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மதிப்பு 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
Iam thrilled to announce that STAR INDIA wins India
— Jay Shah (@JayShah) June 14, 2022
TV rights with their bid of Rs 23,575 crores. The bid is a direct testimony to the BCCI’s organizational capabilities despite two pandemic years.
ரிலையன்ஸ் கடும் போட்டி:
தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு அடிப்படை விலையாக ஒரு போட்டிக்கு 33 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தொகையானது 48 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. 2023 முதல் 2027 வரையிலான காலகட்டத்திற்கான ஒளிபரப்பு உரிமத்திற்காக கடும் போட்டி நிலவியது. டிஸ்னி ஹாட்ஸ்டார் ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கான உரிமத்தை வைத்திருந்த நிலையில், தற்போதைய ஏலத்தில் 4 நிறுவனங்களும் போட்டியிட்டு வந்தன. டிஸ்னி ஹாட்ஸ்டார் 2022ம் ஆண்டு ஐபிஎல் மூலமாக 5,550 கோடி மட்டுமே வருமானமாக ஈட்டியிருந்த நிலையில், வரவிருக்கும் 5 ஆண்டுகளுக்காக கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம்18 டிஸ்னி நிறுவனத்திற்குப் போட்டியாக ஏலத்தில் ஈடுபட்டு வந்தன.
ஸ்டார் இந்தியா
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஐ.பி.எல் போட்டிகளை தொலைகாட்சியில் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் இந்தியா தக்கவைத்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது டிவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். 23,575 கோடி கொடுத்து ஸ்டார் இந்தியா நிறுவனம் உரிமையை தக்கவைத்துக் கொண்டது உறுதியாகியுள்ளது.