(Source: ECI/ABP News/ABP Majha)
Tushar Deshpande: ”மும்பை அணிக்காக விளையாட தயார்” அப்போ சிஎஸ்கே? துஷார் தேஷ்பாண்டே பல்டி
IPL Auction 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான் விளையாட தயார் என்று சிஎஸ்கே அணி முன்னாள் வீரர் துஷார் தேஷ்பாண்டே விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லையென்றால், ஐபிஎல் 2025 இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக சென்னை அணியின் முன்னாள் வீரர் துஷார் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
துஷார் தேஷ்பாண்டே:
இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக துஷார் தேஷ்பாண்டே கடந்த மூன்று சீசன்களாக சென்னை அணிக்காக விளையாடினார். ஆரம்பத்தில் சற்று சோதப்பினாலும், அதன் பிறகு தனது தவறுகளை திருத்திக்கொண்டு சென்னை அணியின் பந்துவீச்சை தலைமை தாங்கும் அளவுக்கு துஷார் தேஷ்பாண்டே CSK இன் நம்பகமான பந்துவீச்சாளர்களில் ஒருவராக தனது நிலையை உயர்த்தினார். தற்பொது மும்பை ரஞ்சி அணிக்காக விளையாடிய அவர் கடந்த ஆண்டு ரஞ்சி தொடரில் சதமும் அடித்திருந்தார்.
இதையும் படிங்க: Watch video : ”உன்னை விட வேகமா பந்து வீசுவேன்” கேட்டு வாங்கிய ஸ்டார்க், விக்கெட்டை வீழ்த்திய ராணா
மும்பை அணியில் ஆட விருப்பம்:
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, சிஎஸ்கே தவிர வேறு எந்த அணியில் விளையாட விருப்பம் என்று கேட்டபோது, தேஷ்பாண்டே மும்பை இந்தியன்ஸ் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்தினார். சிஎஸ்கே தன்னை தக்கவைக்கவில்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவதற்கு விருப்பம் என்று கூறி இருந்தார்.
இது குறித்து பேசிய அவர்,"இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை எடுக்காவிட்டாலும், மும்பை இந்தியன்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுக்கும் என்று விரும்புகிறேன், ஏனென்றால் அது எனது சொந்த ஊர் அணியாகும், மேலும் உங்கள் சொந்த அணிக்காக உங்கள் சொந்த மைதானத்தில், உங்கள் சொந்த ஊர் மக்கள் முன்பு விளையாடுவது வித்தியாசமான உணர்வு. நான் வான்கடேவில் இரண்டு முறை விளையாடியிருக்கிறேன்." . "உங்கள் சொந்த ஊர் மக்கள் முன் விளையாடும் சூழல் முற்றிலும் மாறுபட்டது. நான் மஞ்சள் ஜெர்சியில் விளையாடினாலும், மக்கள் என்னை உற்சாகப்படுத்தினர். எனவே, சிஎஸ்கே இல்லாவிட்டாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற விரும்புகிறேன்," என்று துஷார் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
“If Not CSK Then I Would Love To Play For Mumbai Indians” : Tushar Deshpande@mipaltan Please Get Him in Mumbai Indians At Any Cost 🙏🏼 pic.twitter.com/ncufUmixtM
— Junaid Khan (@JunaidKhanation) November 22, 2024
சிஎஸ்கே அணியின் நம்பகமான வேகப்பந்து பந்துவீச்சாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட துஷார் தேஷ்பாண்டே. 36 ஐபிஎல் போட்டிகளில், விளையாடி 42 விக்கெட்டுகளை சராசரியாக 29.60 மற்றும் 9.65 என்கிற எக்னாமியில் வீழ்த்தியுள்ளார். கடந்த இரண்டு சீசன்கள் அவருக்கு சிறந்த ஐபிஎல் சீசன்களாக அமைந்தது. 2023 ஐபிஎல் சீசனில், தேஷ்பாண்டே 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2024 சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது வலுவான ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த இரண்டு ஆண்டுகளில், புதிய பந்து மற்றும் டெத்-ஓவர் பந்துவீச்சாளராக தனது திறமைகளை வளர்த்துக் கொண்ட துஷார் தேஷ்பாண்டேவின் மதிப்பு இந்த ஆண்டு ஏலத்தில் நிச்சயம் உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.