![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2022: குட்டி ரசிகருக்கு ஜெர்சியை பரிசாகக் கழற்றி கொடுத்த டிரென்ட் போல்ட்
இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான ட்ரென்ட் போல்ட் ஒரு குட்டிப் பையனுக்கு தனது ஜெர்சியை கழற்றிக் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
![IPL 2022: குட்டி ரசிகருக்கு ஜெர்சியை பரிசாகக் கழற்றி கொடுத்த டிரென்ட் போல்ட் TrentBoult was spotted gifting his jersey to a young fan, who had donned the RCB jersey. IPL 2022: குட்டி ரசிகருக்கு ஜெர்சியை பரிசாகக் கழற்றி கொடுத்த டிரென்ட் போல்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/28/3df46f772142b9624e6bf7a0e65b7166_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான ட்ரென்ட் போல்ட் ஒரு குட்டிப் பையனுக்கு தனது ஜெர்சியை கழற்றிக் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் பிளோ ஆஃப் சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஏற்கெனவே நடந்த முதலாவது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி 2வது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நேற்றைய 2வது தகுதிச் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதிக் கொண்டன. 158 ரன்களை எடுத்தால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடத் தொடங்கியது. அணி வீரர்களின் பங்களிப்போடு 18.1 ஓவர்களில் அந்த அணி வெற்றி இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ராஜஸ்தான் - குஜராத் அணிகள் இதுவரை இரண்டு முறை மோதியுள்ளன. இரண்டிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
View this post on Instagram
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் சுவாரஸ்யம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நேற்று ராஜஸ்தான் அணி வெற்றி பெற்ற பின்னர் மைதானம் காலியாகிக் கொண்டிருந்தது. அப்போது வீரர்கள் பெவிலியன் செல்லும் பாதையின் அருகே கண்ணாடி வழியாக ஒரு சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவரைக் கடந்து சென்ற டிரென்ட் பவுல்ட் இந்த ஜெர்சி வேண்டுமா எனக் கேட்க அவரும் வாஞ்சையுடன் தலையசைத்தார். அப்போது அவர் ஜெர்சியை கழற்றி இன்னொரு வீரர் மூலம் அந்தப் பையனிடம் சேர்க்க. அதுவரை ஆர்சிபி ஜெர்சி அணிந்திருத பையன் அந்த சட்டையை கழற்றிவிட்டு டிரென்ட் போல்ட் கொடுத்த ஜெர்சியை போட்டுக் கொள்கிறார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)