IPL 2023: சென்னையில் மீண்டும் தல தரிசனம்..! சி.எஸ்.கே. போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது? விலை எவ்வளவு?
ராஜஸ்தான் அணியுடன் சென்னை அணி மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கி இந்தியா முழுவதும் உள்ள 12 நகரங்களில் உள்ள 16 மைதானங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கோப்பைக்காக அனைத்து அணிகளும் களமிறங்கினாலும், ரசிகர்கள் மத்தியில் கோப்பையை விடவும் வீரர்கள் மீதான ஈர்ப்பு ரசிகர்களுக்கு அதிகம் உள்ள அணி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சொல்லலாம். அப்படி அந்த அணி மீதான ஈர்ப்பு ரசிகர்களுக்கு அதிகம் இருக்க காரணம், அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான்.
சென்னை - ராஜஸ்தான்:
தோனி மீதுள்ள ஈர்ப்பினாலேயே, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருப்பவர்களும், இந்தியாவை விட்டு வெளியே இருப்பவர்களும் போட்டி நடக்கும் மைதானங்கள் உள்ள நகரங்களுக்கு வந்து போட்டியை கண்டு செல்கின்றனர். கடந்த போட்டியில் தோனி சந்தித்த மூன்று பந்துகளில் இரண்டு பந்துகளை தொடர்ந்து சிக்ஸருக்கு பறக்கவிட்டு அதகளப்படுத்தி இருந்தார்.
ஆனால் அந்த இரண்டு சிக்ஸர்களும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் இல்லை. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் எப்போது அடிப்பார்? என பலரும் காத்து இருக்கின்றனர். இப்படியான ரசிகர்களுக்கான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வரும் 12ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணிக்கும் பலமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான லீக் போட்டி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை முறையும் டிக்கெட் விலையும் அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் டிக்கெட் விற்பனை:
அதில் வரும் 9ஆம் தேதி(நாளை மறுநாள்) அதாவது ஞாயிற்றுக் கிழமை டிக்கெட் விற்பனை ஆன்லைன் மற்றும் நேரடி கவுண்டர்களில் விற்பனை நடைபெறவுள்ளது. கடந்த முறை சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கான போட்டி டிக்கெட் விற்பனையானது, ஆன்லைன் டிக்கெட்கள் அனைத்தும் விற்பனை தொடங்கிய அரைமணி நேரத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நேரடி டிக்கெட் விற்பனை கவுண்ட்டர்களில் பெண்களுக்கு என தனி கவுண்ட்டர்கள் இருந்தால் மிகவும் சௌகரியமாக இருக்கும் என நீண்ட வரிசையில் பெரும் கூட்டத்தில் நின்று டிக்கெட் வாங்கிய பெண்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், பெண்களுக்கு என தனி டிக்கெட் கவுண்டர்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை சேப்பாக்கம் மைதான நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டண விபரம்
கேலரி C/D/E Lower - நேரடி விற்பனை - ரூபாய் 1,500.
கேலரி D/E Upper - ஆன்லைன் விற்பனை - ரூபாய் 3,000.
கேலரி I/J/K Lower - நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை - ரூபாய் 2,500.
கேலரி I/J/K Upper - நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை - ரூபாய் 2,000.