Surya kumar yadav: 15 வருட சாதனை காலி... சச்சினை முந்திய சூர்யகுமார் யாதவ்! டி20யில் புதிய மைல்கல்
IPL 2025: மும்பை அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன் அடித்த வீரர் என்கிற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சூர்யக்குமார் யாதவ் முறியடித்தார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் சச்சின் டெண்டுல்கரின் 15 ஆண்டுக்கால சாதனையை முறியடித்துள்ளார்.
மும்பை vs பஞ்சாப்:
ஐபிஎல் 2025-ல் 4 அணிகள் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. டாப்-2 இடம் யார் என்பதை தீர்மனிக்கும் முக்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி 20 ஓவர்கள் 7 விக்கெட்டு இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.
சூர்யக்குமார் சாதனை:
இந்தப்போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய சூர்யக்குமார் யாதவ் இந்த சீசனில் தனது 5 வது அரைசதத்தை பதிவு செய்தார்.
இந்த சீசனில் சூர்யக்குமார் யாதவ் பேட்டிங்கில் 640 ரன்கள் எடுத்துள்ள நிலையில் மும்பை அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன் அடித்த வீரர் என்கிற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சூர்யக்குமார் யாதவ் முறியடித்தார். இதற்கு 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சச்சின் 5 அரைசதங்களுடன் 618 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யக்குமார் யாதவ் 640 ரன்கள் எடுத்துள்ளார், இது அவரின் சிறந்த ஐபிஎல் சீசன் என்று சொல்லலாம். இதற்ற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 606 ரன்கள் எடுத்தார்.
அதிக 25+ ஸ்கோர்கள்
மேலும் டி 20 போட்டிகளில் தொடர்ந்து 14 முறை 25 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையையும் சூர்யக்குமார் யாதவ் படைத்துள்ளார். இந்தப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர் டெம்பா பவுமா 13 முறை 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
- சூர்யக்குமார் யாதவ் - 14 போட்டிகள்
- டெம்பா பவுமா- 13 போட்டிகள்
- பிராட் ஹாட்ஜ்- 11 போட்டிகள்
- ஜாக்ஸ் ரூல்டாஃப் - 11 போட்டிகள்
- குமார் சங்க்காரா- 11 போட்டிகள்
- கிறிஸ் லின் - 11 போட்டிகள்
- கைல் மேயர்ஸ் - 11 முறை
- Most runs for MI in a single IPL season.
— Johns. (@CricCrazyJohns) May 26, 2025
- 5 50+ scores in IPL 2025.
- 14 25+ scores in IPL 2025.
- Only MI batter to score 600+ runs in a season twice.
ONE & ONLY SURYAKUMAR YADAV 👑 pic.twitter.com/WkVPoljEXG
மும்பை அணி தோல்வி:
185 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிப்பெற்றது, பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 73 ரன்கள் அடித்தார், அவருக்கு பக்கப்பலமாக பிரியான்ஷ் ஆர்யா 62 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்,
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வெள்ளிக்கிழமை நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் விளையாட உள்ளது. அதேப்போல் பஞ்சாப் அணி முதல் குவாலிஃபையர் போட்டியில் விளையாட உள்ளது.





















