SRH vs MI Innings highlights: ராகுல்திரிபாதி, பிரியம்கார்க், பூரண் அதிரடி..! மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு..!
SRH vs MI IPL 2022: மும்பை அணிக்கு எதிராக ராகுல்திரிபாதி, பிரியம் கார்க், பூரண் அதிரடியால் ஹைதராபாத் அணி 193 ரன்களை விளாசியது.
![SRH vs MI Innings highlights: ராகுல்திரிபாதி, பிரியம்கார்க், பூரண் அதிரடி..! மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு..! SRH vs MI IPL 2022: sunrisers hyderabad sets 194 runs target against Mumbai Indians SRH vs MI Innings highlights: ராகுல்திரிபாதி, பிரியம்கார்க், பூரண் அதிரடி..! மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/17/807b4cfb06fafdf8da88aac77909142c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பிரம்மாண்ட வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் ஆட்டத்தை தொடங்கிய ஹைதராபாத் அணி அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. ஆனால், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 9 ரன்களில் அவுட்டானார்.
அடுத்து ஜோடி சேர்ந்த பிரியம் கார்க்கும், ராகுல் திரிபாதியும் அதிரடியாக ஆடினர். இதனால், பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி 6 ஓவர்களில் 57 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின்னர், பிரியர் கார்க் அதிரடியாக ஆடினர். அணியின் ஸ்கோர் 9.5 ஓவர்களில் 96 ரன்களை எட்டியபோது பிரியம்கார்க் அவுட்டாகினார். அவர் 26 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 42 ரன்கள் விளாசினார்.
அடுத்து ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதியும், நிகோலஸ் பூரணும் மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினர். இதனால், 15 ஓவர்களில் ஹைதராபாத் 150 ரன்களை கடந்தது. நிகோலஸ் பூரண் 22 பந்தில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 38 ரன்கள் விளாசிய நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் 44 பந்தில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 76 ரன்கள் விளாசிய ராகுல் திரிபாதியும் அவுட்டாகினார்.
இதனால், கடைசியில் ஹைதராபாத் ரன் வேகம் குறைந்தது. மார்க்ரம் 2 ரன்னில் அவுட்டாகினார். கடைசியில் 20 ஓவர்களின் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை விளாசியது. கேப்டன் வில்லியம்சன் 8 ரன்களுடன், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மும்பை வீரர் ராமன்தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, சாம்ஸ், மெரிடித் என மும்பை வீரர்கள் அனைவரது பந்துவீச்சையும் ஹைதராபாத் வீரர்கள் விளாசினர். ராமன்தீப் மட்டும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.
இந்த போட்டியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றால் மட்டுமே ஹைதராபாத் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)