(Source: ECI/ABP News/ABP Majha)
Ruturaj Gaikwad: என்னது! ரசிகர்களுக்கு ஒரு வாவ் செய்தி.. ருதுராஜ் கெய்க்வாட்டின் காதலி இப்படிப்பட்டவங்களா?
ருதுராஜ் கெய்க்வாட் தனது டிசர்ட்-டில் இருந்த 4 ஸ்டார்களுடன், 5வதாக ஸ்டார் ஒன்றை தனது கைகளால் வரைந்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசன் கடந்த மே 30ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதில், குஜராத் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்றது.
இந்த வெற்றியின் மூலம் அதிக முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்து கொண்டது. இந்த போட்டிக்கு பிறகு சென்னை அணி கேப்டன் எம்.எஸ் தோனியுடன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அவரது வருங்கால மனைவி உத்கர்ஷா பவார் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
View this post on Instagram
அப்போது, ருதுராஜ் கெய்க்வாட் தனது டிசர்ட்-டில் இருந்த 4 ஸ்டார்களுடன், 5வதாக ஸ்டார் ஒன்றை தனது கைகளால் வரைந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
யார் இந்த உத்கர்ஷா பவார்..?
- புனேவைச் சேர்ந்த உட்கர்ஷா பவார், மகாராஷ்டிராவுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இவரும் வலது கையால் பேட்ஸ்மேன் மற்றும் மீடிய வேகப்பந்துவீச்சாளர் .
- அக்டோபர் 13, 1998 இல் பிறந்த உட்கர்ஷா, தனது 11 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
- புனேவில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் உடற்தகுதி அறிவியல் கழகத்தின் (INFS) மாணவியும் ஆவார்.
- மே 30 ம் தேதி சிஎஸ்கே கோப்பையை வென்றபோதுதான் ருதுராஜுடன் உத்கர்ஷாவும் புகைப்படம் எடுத்து கொண்டார்.
- கெய்க்வாட் தனது கைகளில் கோப்பையை ஏந்தியபோது உத்கர்ஷா உடன் இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், உத்கர்ஷா பவாரும், கெய்க்வாடும் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் அமர்ந்திருந்த புகைப்படத்தை ருதுராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
View this post on Instagram
எப்போது திருமணம்..?
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உத்கர்ஷா பவார் ஜூன் 3-4 தேதிகளில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2023 தொடர் முடிந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து கிளம்ப இருந்தார். திருமணம் நடைபெற இருப்பதாக ருதுராஜ், பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்தார். அதன் காரணமாக, ருதுராஜ் பதிலாக பேக் அப் பிளேயராக ஜெய்ஸ்வாலை பிசிசிஐ நிர்வாகம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தது.