RR vs MI IPL 2023: அதிக வெற்றியுடன் மும்பை முன்னிலை..! வான்கடேவில் ஆதிக்கம் செலுத்துமா ராஜஸ்தான்..? இதுவரை நேருக்கு நேர்..!
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளுக்கு பிறகு கட்டாய வெற்றியுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
ஐபிஎல் 2023 தொடரின் 42வது போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளுக்கு பிறகு கட்டாய வெற்றியுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. அதே நேரத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய பெருமையுடன் களமிறங்கும்.
இரு அணிகளும் மோதும் போட்டியானது வான்கடே மைதானத்தில் நடைபெறுவதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RR vs MI ஹெட் டூ ஹெட்:
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. அதில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் 14 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 6 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 முறையும் வெற்றி கண்டுள்ளது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளது. இதில், 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியும், 3 முறை தோல்வியும் கண்டுள்ளது.
புள்ளி விவரங்கள் | மும்பை | ராஜஸ்தான் |
அதிகபட்ச ஸ்கோர் | 212 | 208 |
குறைந்தபட்ச ஸ்கோர் | 92 | 90 |
1st பேட்டிங் வெற்றி | 7 | 3 |
2nd பேட்டிங் வெற்றி | 7 | 9 |
அதிக ரன்கள் | சூர்யகுமார் யாதவ் -359 ரன்கள் | ஜாஸ் பட்லர் -467 ரன்கள் |
தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் | கோரி ஆண்டர்சன் (95) | பென் ஸ்டோக்ஸ் (107) |
அதிக விக்கெட்கள் | ஜஸ்பிரித் பும்ரா - 17 | ஆர்ச்சர் - 12 |
சிறந்த பந்துவீச்சு | நாதன் கூல்டர்-நைல் (4/14) | சோஹைல் தன்வீர் (4/14) |
கணிக்கப்பட்ட அணி விவரம்:
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், நெஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, அர்ஜுன் டெண்டுல்கர்
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்& விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்