RR vs DC, IPL 2023: வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்?.. டெல்லி - ராஜஸ்தான் மோதல்..டாஸ் விவரம் இதோ
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி - ராஜஸ்தான் மோதல்:
ஐபிஎல் 2023 தொடரின் 11 வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது உள்ளூர் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த வார தொடக்கத்தில் பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இருப்பினும் இந்த போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதேநேரம், முதல் லீக் போட்டியி ல் அபார வெற்றி பெற்றது. அதேநேரம், வார்னர் தலைமையிலான டெல்லி அணி இதுவரை விளையடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், மீண்டும் வெற்றிப்பதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணியும், தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய டெல்லி அணியும், முனைப்பு காட்டுவதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அணி நிலவரம்:
டெல்லி அணியில் வார்னர் மட்டுமே ஓரளவுக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக விளையாட அனுபவம் வாய்ந்த வீரர்கள் வேறு யாரும் இல்லாதது டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அக்ஷர் படேல் ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆல்-ரவுண்டராக உள்ளார். பிரித்வி ஷா போன்ற இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே டெல்லி அணியால் முதல் வெற்றியை பதிவு செய்ய முடியும்.
ராஜஸ்தான் அணி நிலவரம்:
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் கொண்ட அணியாக உள்ளது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற துடிக்கும். மேலும், ஐபிஎல் 2023 தொடரில் பர்பில் கேப் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் யுஸ்வேந்திர சாஹலை எதிர்கொள்வது டெல்லி அணிக்கு கடினமாக இருக்கும்.
நேருக்கு நேர்:
கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் இரண்டு முறை மோதியது. இதில், இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றிபெற்றன.
விளையாடிய போட்டிகள் - 26
ராஜஸ்தான் ராயல்ஸ் வென்ற போட்டிகள் - 13
டெல்லி கேப்பிட்டல்ஸ் வென்ற போட்டிகளில் - 13
கைவிடப்பட்ட போட்டிகள் - 0
டை - 0
கடந்த 5 ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டிகள்:
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மோதியபோது மிட்செல் மார்ஷ் 62 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து டெல்லி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவினார்.