IPL 2024 Mumbai Indians: மும்பை இந்தியன்சுக்கு மீண்டும் கேப்டன் ஆகிறாரா ரோகித் சர்மா?
ரோகித் சர்மாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக்க அந்த அணி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீசனின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து செயல்பட்டு வருபவர் ஹர்திக் பாண்டியா. முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் ஆண்டே ஐ.பி.எல். கோப்பையை வென்றவர்.
அடுத்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ரன்னப் அப் வரை அழைத்துச் சென்றவர்.இப்படி தான் கேப்டனாக பொறுப்பேற்ற இரண்டு வருடங்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெயரை வாங்கி கொடுத்தவர் ஹர்திக். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை மீண்டும் தங்கள் அணிக்கு எடுத்தது. அதோடு மும்பை அணியின் கேப்டனாக 5 ஐ.பி.எல் கோப்பையை வென்றுக் கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.
மேலும், ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாகவும் நியமித்தது அந்த அணி நிர்வாகம். ஆனால் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் அந்த அணி ரசிகர்களையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும், அதை கண்டு கொள்ளாத மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தான் கேப்டன் என்பதில் தீவிரமாக இருந்தது. அந்த வகையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்தது. இது மேலும் அந்த அணி ரசிகர்களை கோவமடையச் செய்தது.
மீண்டும் கேப்டனாகும் ரோகித்?
இந்நிலையில் தான் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் மீண்டும் ரோகித் சர்மாவை நியமிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மாவிடம் பேசியிருக்கிறது. ஆனால் தன்னிடம் இருந்த கேப்டன் பொறுப்பை எந்த காரணங்களும் இன்றி பறித்துவிட்டு வேறு ஒருவருக்கு வழங்கி, தற்போது மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கச் சொல்வதை ரோகித் சர்மா நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக இது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் ரோகித் சர்மா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று ஒரு தரப்பு ரசிகர்களும் ரோகித் சர்மா தான் கேப்டனாக இருந்து இனி வரும் போட்டிகளை வழிநடத்த வேண்டும் எனவும் ஒரு தரப்பு ரசிகர்களும் கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க: Different Country Players : இரு நாடுகளுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் யார் யார் தெரியுமா? இத்தனை வீரர்களா?
மேலும் படிக்க: IPL 2024 Points Table: முதலிடத்தில் தொடர்ந்து சிஎஸ்கே.. ரன் மழை பொழியும் விராட் கோலி.. முழு அப்டேட் இதோ!