RCB vs SRH, IPL2022 Live: ஹசரங்கா சுழலில் ஆர்சிபி அணி அசத்தல் வெற்றி ..!
RCB vs SRH, IPL2022 Live: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்..!

Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்புத் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் 5 தோல்விகளை பெற்றுள்ளது. அத்துடன் அந்த அணி 4வது இடத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மீண்டும் ரன்கள் அடிக்க தொடங்கியுள்ளார். இதனால் அந்த அணியின் பேட்டிங்கிற்கு சற்று ஆதரவாக அமைந்துள்ளது. எனினும் அந்த அணியின் மற்றொரு முக்கியமான வீரரான மேக்ஸ்வேல் சற்று சொதப்பி வருகிறார். இது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை நடப்புத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மற்றும் 5 தோல்வியை பெற்றுள்ளது. கடைசியாக விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது. இதன்காரணமாக இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி பெற முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
RCB vs SRH, IPL2022 Live: எய்டன் மார்க்கரம் 21 ரன்களில் அவுட் !
சன்ரைசர்ஸ் அணியின் வீரர் எய்டன் மார்க்கரம் 21 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
RCB vs SRH, IPL2022 Live: 6 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் 39/2
6 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.




















