RCB vs KKR LIVE Score: சொந்த மண்ணில் சோடை போன பெங்களூரு; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
IPL 2024 RCB vs KKR LIVE Score: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
17வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அதாவது மார்ச் 29ஆம் தேதி முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் நடைபெறுகின்றது.
இரு அணிகளில் பெங்களூரு அணி இதுவரை இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியிலும் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இதுவரை ஒரு லீக் போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை மொத்தம் 9 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த 9 லீக் போட்டிகளிலும் உள்ளூர் மைதானத்தில் விளையாடிய அணியே வெற்றி பெற்றுள்ளது. அந்த நிலை இந்த போட்டியில் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 போட்டிகளில் வென்று ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி 18 போட்டிகளில் வெற்றியை இழந்ததில், மிகவும் முக்கியமான போட்டி ஒன்று உள்ளது. அதாவது பெங்களூரு அணியின் மிகக் குறைந்த ஸ்கோர் என்றால் அது, 49 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதுதான். இதுதான் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் மிகக் குறைந்த ஸ்கோர் என்பதைக் காட்டிலும், ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் மிகக் குறைந்த ஸ்கோராக உள்ளது.
இரு அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் வெற்றியைச் சந்தித்துள்ளதால், இந்த போட்டியில் வெற்றிப்பயணத்தை தொடர்ப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இரு அணிகளின் ப்ளேயிங் லெவன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அல்ஜாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரமன்தீப் சிங், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
RCB vs KKR LIVE Score: சொந்த மண்ணில் சோடை போன பெங்களூரு; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
இறுதியில் கொல்கத்தா அணி 16.5 ஓவர்களில் விக்கெட்டுகளை 3 இழந்து 186 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
RCB vs KKR LIVE Score: வெங்கடேஷ் ஐயர் அவுட்!
வெங்கடேஷ ஐயர் 30 பந்தில் 50 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை யாஷ் தயாள் பந்தில் இழந்து வெளியேறினார்.
RCB vs KKR LIVE Score: வெங்கடேஷ் ஐயர் சரைசதம்!
வெங்கடேஷ் ஐயர் 29 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் விளாசி தனது அரைசதத்தினை விளாசியுள்ளார்.
RCB vs KKR LIVE Score: 150 ரன்களை எட்டிய கொல்கத்தா!
கொல்கத்தா அணி 14 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
RCB vs KKR LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது!
12 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் குவித்துள்ளது.