RCB vs KKR: கொல்கத்தா வாழ்க்கையில் விளையாடும் மழை! குதூகலத்தில் ஆர்சிபி.. சின்னசாமி நிலவரம் என்ன?
RCB vs KKR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இடையிலான போட்டி மழையினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலில் ஏற்ப்பட்ட போரின் காரணமாக ஐபிஎல் தொடரானது பாதியிலேயே நிறுத்தப்பட்டது, இந்த நிலையில் போர் பதற்றம் தணிந்த நிலையில் இன்று முதல் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கி நடைப்பெறவுள்ளது.
ஆர்சிபி vs கேகேஆர்:
இன்று நடைப்பெறும் போட்டியில் முக்கிய போட்டியில் பலம் வாய்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன, புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கும் முனைப்பில் உள்ளது ஆர்சிபி அணி, மீதமுள்ள 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றாலே டாப் - 2 இடத்தை பெங்களூரு அணி உறுதி செய்துவிடும்.
மறுப்பக்கம் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முக்கியமான போட்டியாக இந்தப்போட்டி உள்ளது, அந்த அணி மீதமுள்ள போட்டிகளில் நல்ல ரன்ரேட் அடிப்படையில் வெற்றிப்பெற்றால் மட்டுமே கொல்கத்தா அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 20 முறையும் , பெங்களூரு அணி 15 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த போட்டிகளில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் கொல்கத்தா 222 ரன்களையும், குறைந்தபட்சமாக பெங்களூரு அணி 49 ரன்களையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
விளையாடும் மழை:
இன்று மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டி மழையால் பாதிக்கப்பட உள்ளது.
பிற்பகல் 1 மணிக்கு அங்கு மழை பெய்ய 25% வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் மாலை 5 மணிக்கு 58% ஆக உயரத் தொடங்குகிறது. மாலை 7 மணிக்கு டாஸ் போடும் நேரத்தில் மழைக்கான 71% ஆக அதிகரிக்கிறது.
ஆனால்இரவில் அங்கு மழை பெய்யும் வாய்ப்புகள் குறையவாக இருப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இரவு 9 மணிக்கு 49% மழை பெய்ய வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து 34% மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றாலும். பெங்களூருவில் மைதானம் எவ்வளவு மழை பெய்தாலும் சீக்கிரம் மைதானத்தை போட்டி நடத்துவதற்கு தயார் செய்ய முடியும்.
விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கைக்கு பெரிய அளவிலான மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளதால், ஆர்சிபி ரசிகர்கள் இந்த மழை குறுக்கீட்டால் அது பழாகிவிடும் என்கிற அச்சத்தில் உள்ளாமேலும், இன்று வெற்றி பெற்றால் ஆர்சிபி அணி அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
கேகேஆர் அணி இதற்கு முன்னர் ஈடன் கார்டன்ஸில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே விளையாடிய நிலையில், மழை காரணமாக போட்டி அந்த கைவிடப்பட்டது.





















