மேலும் அறிய

RCB vs DC, IPL 2023: வெற்றிபெற்று சிங்கப்பாதைக்கு திரும்பப்போவது யார்?.. பெங்களூரு - டெல்லி இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

பெங்களூரு - டெல்லி மோதல்:

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அந்த வகையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

நடப்பு தொடரில் இதுவரை:

நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி அத்தனையிலும் தோல்வி கண்ட டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேநேரம், பெங்களூரு அணியோ தனது முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும், அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டது. இதனால், வெறும் இரண்டு புள்ளிகள் உடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதனால் டெல்லி அணி தனது வெற்றிக்கணக்கை தொடங்கவும், பெங்களூரு அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பவும் முனைப்பு காட்டி வருகின்றன.

RCB vs DC, IPL 2023: வெற்றிபெற்று சிங்கப்பாதைக்கு திரும்பப்போவது யார்?.. பெங்களூரு - டெல்லி இன்று மோதல்

அணிகளின் நிலவரம்:

டூப்ளெசிஸ், கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பெங்களூரு அணிக்காக சிறப்பாக செயல்பட்டாலும், பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவது பெங்களூரு அணியின் பெரிய பலவீனமாக கருத முடிகிறது. டெல்லி அணியை பொருத்தவரையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே, நடப்பு தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. கேப்டன் வார்னர் மற்றும் துணை கேப்டன் அக்சர் படேல் மட்டுமே அணியை வெற்றி பெறச்செய்ய தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மைதானம் எப்படி?

பெங்களூரு மைதானம் எப்போது பேட்டிங்கிற்கு சாதகமானது தான். முதல் பந்து முதலே பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாடலாம் என்பதால், எந்த ஒரு இலக்கும் இங்கு போதுமானதாக கருதமுடியாது. டாஸ் வென்ற எந்த அணியும் பந்துவீசவே இங்கு முனைப்பு காட்டும். 

சிறந்த பேட்ஸ்மேன்:

இன்றைய போட்டியில் கவனம் ஈர்கக்கூடிய பேட்ஸ்மேன் ஆக பெங்களூரு கேப்டன் டூப்ளெசிஸ் இருப்பார் என கருதமுடிகிறது. 38 வயதான அவர் நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 175 ரன்களை சேர்த்துள்ளார். பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடும் மிடில் ஓவர்களில் கூட, டூப்ளெசியால்  வேகமாக ரன் சேர்க்க முடியும் என்பது பெங்களூரு அணிக்கு பெரும் சாதகமாக உள்ளது.

சிறந்து பந்துவீச்சாளர்:

இன்றைய போட்டியில் கவனம் ஈர்கக்கூடிய பந்துவீச்சாளராக டெல்லி அணியை சேர்ந்த ஆண்ரிச் நோர்ட்ஜே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  நடப்பு தொடரில் 3 போட்டிகளில் விளையாடி அவர் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சின்னசாமி மைதானத்தில் வழக்கமாக வேகப்பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினாலும், நோர்ட்ஜேவால் அங்கு அதிக வேகம் மற்றும் பவுன்சருடன் பந்துவீச முடியும் என்பது அவரது பலமாக கருத முடிகிறது.

யாருக்கு வெற்றி: இன்றைய போட்டியில் சேஸிங் செய்யும் அணி வெற்றி பெற வாய்ப்பு

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
Kia Sorento: இந்தியாவிற்கான முதல் ஹைப்ரிட் காரை பேக் செய்த கியா - 7 சீட்டர், டர்போசார்ஜ்ட் இன்ஜின் - லாஞ்ச் டேட்?
Kia Sorento: இந்தியாவிற்கான முதல் ஹைப்ரிட் காரை பேக் செய்த கியா - 7 சீட்டர், டர்போசார்ஜ்ட் இன்ஜின் - லாஞ்ச் டேட்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
சென்னை விமான நிலையத்தில் புதிய மாற்றம்! மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு இனி 15 நிமிடம் இலவசம்!
Kia Sorento: இந்தியாவிற்கான முதல் ஹைப்ரிட் காரை பேக் செய்த கியா - 7 சீட்டர், டர்போசார்ஜ்ட் இன்ஜின் - லாஞ்ச் டேட்?
Kia Sorento: இந்தியாவிற்கான முதல் ஹைப்ரிட் காரை பேக் செய்த கியா - 7 சீட்டர், டர்போசார்ஜ்ட் இன்ஜின் - லாஞ்ச் டேட்?
பெங்களூரில் பட்டப்பகலில் 7 கோடி கொள்ளை! RBI அதிகாரிகள் போல் நடித்து அதிர்ச்சி கொடுத்த கும்பல்!
பெங்களூரில் பட்டப்பகலில் 7 கோடி கொள்ளை! RBI அதிகாரிகள் போல் நடித்து அதிர்ச்சி கொடுத்த கும்பல்!
Kanchipuram Exports: காஞ்சிபுரம் சாதனை ஏற்றுமதியில் முதலிடம்! 1.08 லட்சம் கோடி ஏற்றுமதி! டாப் 10 லிஸ்ட் இதோ!
Kanchipuram Exports: காஞ்சிபுரம் சாதனை ஏற்றுமதியில் முதலிடம்! 1.08 லட்சம் கோடி ஏற்றுமதி! டாப் 10 லிஸ்ட் இதோ!
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Embed widget